செல் போன் இருந்திருந்தால் ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது. குஷி படத்தை பற்றி சொன்ன நபர். எஸ் ஜே சூர்யா அளித்த செமையான விளக்கம்.

0
3581
kushi
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் வெளியாகி 21 வருடங்களை நிறைவு செய்தது.

இதையும் பாருங்க : வைரமுத்துக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின், நக்கலடித்து சின்மயி. திருமண போட்டோவை போட்டு பங்கம் செய்த காஜல்.

- Advertisement -

இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் #21YearsOfEvergreenKushi என்ற ஹேஷ் டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர். அதே போல குஷி படத்தை பற்றிய பல சுவாரசியமான தகளவிகளை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர், செல் போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே ‘குஷி’ படம் முடிஞ்சிருக்கும், ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, அப்படியெல்லாம் இல்ல, மனசு வலில ரெண்டு பெரும் போன தொலைச்சிட்டாதா காட்டுனா போச்சி. நண்பர்களுக்கு மாறி மாறி போன் பண்ணதே அவங்க சிவா ஸ்டேஷன் போய்ட்டான், ஜெனி ஸ்டேஷன் போய்ட்டா அப்படினு சொல்லத்தான். அவ்வளவு தான். எது கிளைமாக்ஸோ அதற்கு ஏற்றார் போல காட்சிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு சீனையை சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement