சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் :
இந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, படத்தில் சில காட்சிகளை சிவகார்த்திகேயன் மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறராம். அதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என பல சர்ச்சையான பேச்சுக்கள் வந்த வண்ணமாக இருந்தது.
விமர்சித்த யூடியூப் சேனல் :
இப்படியொரு நிலையில் தான் சினிமா விமர்சனம் கூறும் பிரபல யூடியூப் சேனல் ஓன்று சிவகார்த்திகேயனுக்கும் “மாவீரன்” படத்தின் இயக்குனர் மடோனாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் இது போன்ற இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் கூறியிருந்தது. மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த மூன்று வாரங்களாக “மாவீரன்” திரைப்படத்திற்கு படப்பிடிப்பு வேண்டுமென்றே பல முறை நிறுத்தப்பட்டதாக கூறினார்கள்.
காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது :
அதோடு மாவீரன் படத்தின் இரண்டாம் நாள் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே இயக்குனருக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்ததாகவும். நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை வணிகமாக்க விரும்பினார் ,ஆனால் இயக்குனர் அப்படி செய்ய விரும்பவில்லை. சமீபத்திய செய்தி என்னவென்றால், தயாரிப்பாளர்கள் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய கதைக்களத்தில் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள் என்று கூறினார்கள்.
மீண்டும் 45 நாட்கள் ரீ ஷூட்டிங் :
மேலும் இதற்கு பிறகு 45 நாட்கள் ரீ ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும். தற்போது உருவாகும் படம் மூன்றிலும் புதிய கதைகளை என்றும், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட காட்சிகளில் சில மட்டும் பயன்படுத்த படலாம் என்றும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் நடிப்பதினால் அடுத்து இவர் நடிக்கும் “ராஜ் கமல் இன்டர்நெஷனல்” திரைப்படத்தை இதனால் தான் தள்ளிபோடுகிறார் என்று அந்த ஊடகத்தின் உரிமையாளர்கள் கூறினார்கள்.
. @jbismi_offl @dearshakthi @Anthanan_Offl @valaipechu Thank u so much for taking enormous effort in promoting our film🙏Your hard work and Research shows your love towards our team❤️👌👍we have got more power and energy from you to make our goal BiGGER!#Maaveeran #VeerameJeyam
— arun Viswa (@iamarunviswa) January 25, 2023
பதிலடி கொடுத்த மாவீரன் தயாரிப்பாளர் :
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த வீடியோவுக்குப் பதிலளித்து, “மாவீரன்” தயாரிப்பாளர் அருண் விஷ்வா, “எங்கள் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு மகத்தான முயற்சி எடுத்ததற்கு மிக்க நன்ற. உங்கள் கடின உழைப்பும் ஆராய்ச்சியும் எங்கள் குழுவின் மீதான உங்கள் அன்பைக் காட்டுகிறது எங்களுக்கு அதிக சக்தி கிடைத்துள்ளது எங்கள் இலக்கை பெரிதாக்க உங்களிடமிருந்து ஆற்றல்! என்று பதிவிட்டுருந்த நிலையில் நெட்டிசன்கள் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனலை விமர்சித்து வருகின்றனர்.