தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுவார். தற்போது, ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்கள், சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க இந்தியன் தாத்தாவை வர வைப்பார்கள். அதற்காக, ‘கம் பேக் இந்தியன்’ என்ற ஹேஷ் டேகை சோசியல் மீடியாவில் வைரலாக்குவார்கள்.
இந்தியன் 2 படம்:
பின் தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வந்து, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று போராடுகிறார். இதனால் சேனாதிபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் பெறவில்லை. சங்கர் இயக்கியதிலே இந்த படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. யாரும் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று #Indian2Disaster ஹேஸ் டேகை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி இருந்தார்கள்.
#Indian2 roast full ah paarunga 7 1/2 minute video
— S A B A R I 🤘 (@itssabariiii) August 12, 2024
Stressbuster gurentee 💯 😂 pic.twitter.com/FWL7VNYOdR
ஓடிடியில் வெளியான ‘இந்தியன் 2’:
தற்போது மீண்டும் ‘இந்தியன் 2’ படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் ட்விட்டரில் கலாய்த்து தள்ளுகிறார்கள். இந்நிலையில், சிறிய பெண் தனது யூடியூப் சேனலில் இந்தியன் 2 படத்தை ட்ரோல் செய்துள்ளார். அதில், ரஜினி சாரோட ‘லால் சலாம்’ படம் இன்னும் எதற்கு ஓடிடியில் வெளியிடாம இருக்காங்க. எல்லாம் ஒரு காரணத்திற்காக தான். கடந்த வெள்ளிக்கிழமை இந்தியன் 2 படம் Netflix ல் வெளியானது. ரவுண்ட் 1, தியேட்டர்லயே முடிச்சுட்டாங்க. இப்போ ரவுண்ட் 2, சோசியல் மீடியாவில் முடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ஒன்னும் முடிக்க வரல படத்தில் இருக்கும் குறைகள் தான் சொல்ல வந்தேன், யாரும் என்னை திட்டி விடாதீர்கள் என்றார்.
‘இந்தியன் 2’ வை ட்ரோல் செய்யும் பாப்பா:
மேலும், படத்தில் ஒரு காட்சியில் பெண் ஒருவர் தற்கொலை செய்யும் போது, அவரைக் காப்பாற்றாமல் நடிகர் சித்தார்த், ‘என்ன ஆச்சு, நான் சோசியல் மீடியா’ என்று டயலாக் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார். அதற்கு இந்தியன் தாத்தா முதலில் இவரை தான் கொல்ல வேண்டும் என்று பங்கமாய் கலாய்த்து உள்ளார். அடுத்து பதிவர்த்தன வர்மம் என்று ஒரு வர்மக்கலை உள்ளதாம். அந்த வர்மம் ஒரு ஆணை பெண்ணாக மாற்றி விடுமாம். ஒரு காட்சியில் அது போல் மாறும் போது, எப்படி வில்லனுக்கு லிப்ஸ்டிக் கண் மையெல்லாம் வந்தது என்று கலாய்த்துள்ளார்.
படத்தில் லாஜிக்கே இல்லை :
அடுத்து ஏர்போர்ட்டில் இருந்து நெடுமுடியை கடத்திக் கொண்டு வருவார்கள். அவருக்கு ‘உறக்க கால வர்மம்’ செய்து அவரை தூங்க வைத்து விடுவார் இந்தியன் தாத்தா. அப்போது அவரது முகம் கோணலாக போய்விடும். நார்மலாக முகம் இருந்தாலே போன் அன் லாக் ஆகாது. ஆனா, இந்தியன் தாத்தா அவருடைய மூஞ்சை பொல பொல என்று ஆக்கிவிட்டு ஃபோனை அன்லாக் செய்கிறார் அது எப்படி என்று கேட்டுள்ளார். மேலும், நாலு பேரு #ComeBackIndian என்று ஹேஷ் டேகை போட்டா எப்படி நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகும்.
‘இந்தியன் 2’ கதையை முடித்த பெண்:
இவரே கம் பேக் என்று சொல்வாராம் இவரே கோ பேக் என்று சொல்வாராம். கடைசியில் இந்தியன் தாத்தாவை அரெஸ்ட் பண்றதுக்கு, பாபி சிம்மா ஒரு லட்சம் #GoBackIndian இருக்கு என்று காரணம் சொல்வதெல்லாம் சுத்த முட்டாள்தனமாக இருக்கிறது என்று பங்கம் செய்து உள்ளார். அது எப்படி ஒரு வயதான தாத்தாவை ஊரே சேர்ந்து அடித்து இருக்கிறது ஆனால், அவர் இந்தியன் தாத்தா என்பதால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று ‘இந்தியன் 2 ‘கதையை முடித்துவிட்டார் அந்தப் பெண்.