கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டேன், ஆனால் – 10வது திருமண நாளில் தன் கணவருக்கு சினேகா பதிவிட்ட க்யூட் பதிவு

0
484
sneha
- Advertisement -

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சினேகா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா.

-விளம்பரம்-
Prasanna and Sneha welcome their second child, a baby girl

இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.

- Advertisement -

சினேகா-பிரசன்னா திரைப்பயணம்:

தற்போது இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார். சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. மேலும், 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.

சினேகா-பிரசன்னா திருமணம்:

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். இப்படி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதோடு இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சினேகா ரொமான்ஸ் பதிவு:

இந்த நிலையில் சினேகா-பிரசன்னா திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து கணவர் பிரசன்னாவுக்கு சினேகா ரொமான்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இது எங்களது பத்தாவது திருமண ஆண்டு. இந்த பத்தாண்டு பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டோம், கருத்து வேறுபாடுகளும் எங்களுக்குள் இருந்தது. நான் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றையும் மீறி விட்டேன். உங்கள் இதயத்தையும் சில சமயம் உடைத்துவிட்டேன். ஆனால், நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பு காட்டி வருகிறீர்கள்.

வைரலாகும் சினேகா-பிரசன்னா புகைப்படம்:

உங்கள் அன்பினால் என்னை மீண்டும் மீண்டும் வென்றீர்கள். அன்பை விட தூய்மையானது இந்த உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது. நீங்கள் என் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக நிரம்பி விட்டீர்கள். லவ் யூ கண்ணம்மா! என்று பதிவு செய்திருக்கிறார். இந்த ரொமான்ஸ் பதிவும், இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் சினேகா பிரசன்னாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களை ஷேர் செய்தும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement