தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் ஒரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். மேலும், 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் சினேகா அவர்கள் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதற்கான வளைகாப்பு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : மகளுக்கு கிடைத்த விருது. மேடையில் முத்தமிட்டு அன்பை பகிர்ந்த கொட்டாச்சி. குயூட் புகைப்படங்கள் இதோ.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர் . அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சினேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது குழந்தையை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுஇருந்தார் . அதில் அவர் கூறியது, கடந்த வாரம் எனக்கு ஒரு அழகான தேவை பிறந்து உள்ளாள். என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம். அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் பிரசன்னா.