ஆரவ்வை உங்கள் போட்டியாளராக நினைக்கவில்லையா?
நண்பன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதிரி பலசாலியாக இருக்க வேண்டும். என்னைவிட பலசாலி, திறமையாளன், அறிவாளி, தந்திரக்காரன் என எல்லா விதத்திலும் இருந்த கணேஷ் வெங்கட்ராமைதான் எதிரியாகப் பார்த்தேன். நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது
ஆரவ் 'பிக் பாஸ்' டைட்டிலுக்குத் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?
அதுவும் பிக் பாஸூக்கே வெளிச்சம். ஏன்னா, எல்லா அக்ரீமென்ட்டும் போட்டதுக்குப் பிறகு பிக் பாஸே சொல்கிறார், 'இங்கு இருக்கும் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கும் ஒருவரை வெளியே அனுப்புவதற்கும் ஒரு முடிவு எடுப்பதற்கும் பிக் பாஸூக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று.
கட்டிப்பிடி வைத்தியத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தினது யார்?
'டைனமிக் செல்ப் அவைக்' என்ற தன்னம்பிக்கை முனைப்பு இயக்கத்துக்குப் போனோம். அரவணைத்து அன்புச் செலுத்துவது மானிடத்தின் மேன்மை என்பதைப் புரிந்துகொண்டோம். பயிற்சி எடுத்தவர்களுடன் நாங்கள் அதைப் பகிர்ந்துகொண்டோம். அதுவும், இருவரும் சம்மதித்தால்தான். இல்லையென்றால் கை குலுக்கியும், கண்களைப் பார்த்தும்கூட வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வது தாய்மையின் வெளிப்பாடாக இருக்கும் என்ற நோக்கத்துடன்தான் அதைச் செய்தோம்.






