லாக்டவுனில் உதித்த ஐடியா – 40 நாட்களில் லட்சங்களை ஈட்டிய தரணியின் சாதனை கதை.

0
370
dharanee
- Advertisement -

கொரோனா லாக்டவுனில் வெறும் 40 நாட்களிலேயே 6 லட்சம் சம்பாதித்த இளைஞரின் சாதனை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகவே கொரோனா உலகையே ஆட்டிப் படைத்தது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கொரோனா தொடங்கிய ஆரம்பத்திலேயே அரசாங்கம் லாக்டவுன் என்று அறிவித்தது. இதனால் இரண்டு வருடங்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். இதனால் ஏழை, பணக்காரன் என எல்லோருமே அவதிக்குள்ளானார்கள். எல்லோரும் சீக்கிரம் முடிந்து விடும் என்று இருந்த மனநிலையில் நாட்கள் செல்லச் செல்ல லாக்டவுன் நீண்டுகொண்டே சென்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தொழில்முனைவர் தரணிதரன் என்ற இளைஞர் கொரோனா லாக்டவுனில் முடங்கி விடாமல் புதிதாக திட்டம் தீட்டி வெறும் 40 நாட்களில் 6 லட்சம் சம்பாதித்துள்ளார். தரணீதரன் என்ற இளைஞர் சென்னையில் சோசியல் ஈகிள் என்ற டிஜிட்டல் மார்கெடிங்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பொறியியல் பட்டதாரி. இதனால் ஆரம்பத்தில் இவர் தன்னுடைய படிப்பு முடிந்தவுடன் ஐடி நிறுவனத்தில் சில வருடம் பணி புரிந்தார். பின் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்றும், ஏதாவது ஒரு தொழிலில் முன்னேற வேண்டும் என்றும் நினைத்து இவர் பிசினஸ் லைனில் குதித்தார்.

- Advertisement -

இதற்காக அதில் அனுபவம் பெற வேண்டும் என்று இவர் சிலகாலம் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணி புரிந்தார். பின் ஓரளவு கையில் கொஞ்சம் பணத்தையும், மனதில் நம்பிக்கையும் வைத்துக்கொண்டு தன்னுடைய நண்பர்களுடன் ஆரம்பத்தில் இவர் ஒரு நிறுவனம் தொடங்கினார். ஆனால், அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைத்தாலும் அதை நீண்ட காலம் கொண்டு போக முடியவில்லை. அதற்கு பிறகு தான் தரணிதரன் வேறு ஒரு புதிய நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். பிறகு 2015 ஆம் ஆண்டு தொடங்கியது தான் இந்த ‘சோஷியல் ஈகிள்’ (Social Eagle) என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம். ஆரம்பத்தில் 3 பார்ட் டைம் ஊழியர்களுடன் தான் இந்த வேலையை தரணி தொடங்கினார்.

மேலும், இவருக்கு மார்க்கெட்டிங்கில் அதிக அனுபவம் இருந்ததாலும், டிஜிட்டலில் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற உத்தியை தெரிந்து கொண்டார். அதன் பின் பெரிய பிராண்டுகள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் பொருட்கள் சேவைகளை ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்ய முன் வந்தார்கள். இதன் மூலம் இவருக்கு நல்ல வாடிக்கையாளர்களும் கிடைத்தார்கள். அதற்கு பிறகு தான் இவர்களுடைய நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது. ஆரம்பத்தில் இவர்கள் ஒரு பிளாட்டில் ஒரு சின்ன வீட்டில் தான் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். தற்போது 14 ஊழியர்கள் 32 ஃப்ரீலான்சர்ஸ் உடன் ‘ரகுலா டெக்’ பார்க்கில் இவர்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெரிய பெரிய பிராண்டுகள், நல்ல குழு என எல்லாமே இவர்களுடைய வாழ்க்கையில் நன்றாக சென்று கொண்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த சமயம் பார்த்து ஊரடங்கு வந்ததால் எல்லா தொழில்களை போல இவர்களுடைய தொழிலும் பாதிப்படைந்தது. இதில் அதிகமாக ஸ்டார்ட்-அப்’ஸ், சிறு-குறு நிறுவனங்கள் என பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்கள். உணவுத்துறை, சுகாதாரம், மருத்துவத் துறை நிறுவனங்கள் தவிர மீதி எல்லா நிறுவனங்களும் முடக்கி வைக்கப்பட்டது. இந்த மாதிரி ஆன்லைன் டிஜிட்டல் மூலம் ஸ்டார்ட்-அப்’களால் வருமானத்தில் இருந்து தான் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியும். மேலும், எந்த லாபம் கிடைக்கவில்லை என்றாலும் இஎம்ஐ, அலுவலக வாடகை, சக ஊழியர்களுக்கு சம்பளம் என இதற்காவது எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் பல திட்டம் தீட்டினார். பின் சோசியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற தற்போது இருக்கும் நவீன டெக்னாலஜியின் பலம் என்பதை புரிந்து கொண்டு ஆன்லைன் வகுப்பு எடுக்க முடிவு செய்தார்.

இப்போது இருக்கும் கொரோனா காலகட்டத்தில் கல்வியை ஆன்லைன் மூலம் தான் கற்பித்து வருகிறார்கள். அது தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தரணி அதை பயன்படுத்தி zoom ஆஃப்பை பயன்படுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் சோசியல் மீடியா மூலம் பணத்தை எப்படி ஈட்டுவது என்று பல தலைப்புகளில் கோர்ஸ் ரெடி பண்ணி வகுப்புகள் எடுக்க தொடங்கினார். தனக்கு தெரிந்த தலைப்புகளில் மூலம் ஒரு வார கோர்ஸ், 15 நாள் வகுப்பு என பிரித்து எந்த ஒரு முதலீடு இல்லாமல் ஆரம்பத்தில் வகுப்புகள் எடுத்தார். பின் தன் நண்பர்கள் வட்டம், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டால் என்று சிறியதாக தன்னுடைய தொழிலை ஆரம்பித்தார். பிறகு அதுவே மக்களிடையே பிரபலமானது.

ஆரம்பத்தில் இவர் இலவசமாக வகுப்புகள் எடுத்தாலும் இவருடைய வெப்சைட் பிரபலமான உடன் கொஞ்சம் கொஞ்சமாக கட்டணம் சேர்க்க ஆரம்பித்தார். கட்டண வகுப்பு என்று சொன்னாலும் மக்கள் மத்தியில் இவர்களுடைய வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் டிஜிட்டலின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அதையே தன்னுடைய மூலதனமாக பயன்படுத்தி பல யுக்திகளைக் கையாண்டார். மேலும், சொந்த நிறுவனம் வைத்திருப்பவர்கள் முதல் புதிய ஐடியா கொண்டு நிறுவனம் தொடங்குபவர்கள் வரை என பலரும் இவருடைய மார்க்கெட்டிங் வகுப்பில் பயிற்சி சேர வந்தார்கள்.

இதுவரை இவர் 60 வெப் வகுப்பு நடத்தி உள்ளார். ரூபாய் 499 இருந்து தொடங்கி 9999 ரூபாய் என கோர்ஸ் கட்டணம் வைத்துள்ளார். அதோடு 40 நாட்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேலாக வருமானம் ஈட்டி உள்ளார். தற்போது லாக்டவுன் தாக்கம் குறைந்துள்ளதால் மறுபடியும் தன்னுடைய சோசியல் ஈகிள் நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். தற்போது இவர் ஒருபக்கம் சோசியல் ஈகிள் மற்றும் இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு என செய்து வருகிறார். இந்த இரண்டு தொழிலுமே அதிகமாக கவனம் செலுத்தி தன்னுடைய ஊழியர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கும் பலனடைய பல வகையில் உதவியாக இருந்து வருகிறார். இவருடைய விடாமுயற்சியினால் பல இளைஞர்களுக்கு தொழிலின் மீது ஒரு தன்னம்பிக்கையும், ஆர்வமும் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

Advertisement