என்னது லாரன்ஸின் உண்மையான பெயர் விருமாண்டியா? அவரின் தற்போதய நிலை என்ன? வைரலாகும் வீடியோ.

0
787
- Advertisement -

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த லாரன்சின் தற்போது நிலை குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லட்சுமி. இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்கள் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனைகளோடு வரும் நபர்களை பேசி உட்கார வைத்து அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நன்றாக சென்றது. பின் இது பல பிரச்சனைகளை கொண்டது. இந்த நிகழ்ச்சிக்கு பலரும் ஆதரவு கொடுத்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

பின் இந்த நிகழ்ச்சி நிறுத்திவிட்டார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களில் ஒருவர் தான் லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் இவர் ‘மேடம் ஆக்சன் மேடம்’, ‘மேடம் மேடம்’ என்றெல்லாம் பேசிய வார்த்தை தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரென்ட்டிங் ஆகி வருகிறது.

இதை பார்த்து பலருமே லாரன்ஸ் என்ன செய்கிறார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் youtuber ஒருவர் லாரன்ஸ் தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்று இருக்கிறார். லாரன்ஸ் கோயம்பேட்டில் உள்ள ஒரு காய்கறி மண்டியில் தான் வேலை செய்திருந்தார்.
இவர் அங்கு மூட்டை தூக்கும் வேலை செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் அந்த யூடியூபர் அங்கு தேடி சென்றிருக்கிறார். அங்கு போய் விசாரித்ததில் பலரும், இவருடைய உண்மையான பெயர் லாரன்ஸ் கிடையாது விருமாண்டி. அதற்குப் பிறகுதான் லாரன்ஸ் என்று மாட்டிக் கொண்டார். இவருக்கு கல்யாணம் எல்லாம் ஆகி குடும்பத்துடன் தான் வாழ்ந்து இருந்தார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகும் இவர் இங்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

மூட்டை தூக்கி சம்பாதிப்பார், சாப்பிடுவார், நிறைய குடிப்பார். வேலை செய்யும் இடத்திலேயே தூங்கிக் கொள்வார். கொரோனாவுக்கு பிறகு அவரை நாங்கள் பார்க்கவே இல்லை. எங்கு சென்றார் என்று கூட தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை. உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வேலைக்கு வந்து இருப்பார். அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement