இந்த ரெண்டு பேருடன் ஒரு அறையில் இருபதை விட தெருநாயுடன் நான் பாதுகாப்பாக இருப்பேன் – எந்த ரெண்டு பேர சொல்றார் பாருங்க சின்மயி.

0
700
chinmayi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

தொடர்ந்து வைரமுத்துவை சீண்டும் சின்மயி :

அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வைரமுத்து குறித்து தற்போதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் சின்மயி. மேலும், பெண்கள் குறித்து எந்த ஒரு செய்திகள் வந்தாலும் அதில் வைரமுத்துவை எடுத்துக்காட்டாக வைத்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

ஆண்களை தெருநாயுடன் ஒப்பிட்ட பெண் :

இந்த நிலையில் ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசியதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரியாணி மேன் போட்ட வீடியோவிற்கு பதிலடி கொடுத்து சின்மயி போட்ட ட்வீட்டில் வைரமுத்துவை மறைமுகமாக சாடியுள்ளார் சின்மயி. சமீபத்தில் பெண் ஒருவர் ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். இதற்கு பிரியாணி மேன் தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

பதிலடி கொடுத்த பிரியாணி மேன் :

அவரின் வீடியோவை பகிர்ந்த பத்திரிகையாளர் சோனியா ‘ இந்த பிரியாணி மேன் சைக்கோ இன்னும் திருந்தலையா? ஏற்கனவே அர்ச்சனா பாத்ரூம் டூர் வீடியோக்கு அவ்ளோ அப்யூஸ் பண்ணான், போறா குறைக்கு மதன் ஓபிக்கு முட்டு கொடுத்துட்டு இருந்தான், இப்ப இப்படி ஒரு வீடியோ. திருந்தாத ஜென்மம்.’ என்று பதிவிட்டு சின்மயியையும் Tag செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சின்மயி, பிரியாணி மேனை மட்டும் கண்டித்து இருந்தார்.

வைரமுத்துவை மறைமுகமாக சாடல் :

இதற்கு ரசிகர் ஒருவர் ‘ஆண்களை தெருநாய் என்று அந்த பெண் சொன்னதை பற்றி மட்டும் ஏன் பேசவில்லை’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சின்மயி ‘பொதுவாக மனிதர்களை விட பெண்களும் மனிதர்களும் நாய்களை நம்பகமானவர்களாகக் காண்பார்கள் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை – ராதா ரவி மற்றும் தமிழ் புலவரை விட ஒரு அறையில் தெருநாய் இருந்தால் நான் பாதுகாப்பாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement