லிங்கா பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ? மாப்பிளை இந்த 3 பேர்ல யாரு ? – குழப்பத்தில் ரசிகர்கள்

0
367
sonakshi
- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட நடிகை சோனாக்ஷி சின்ஹா நிச்சயதார்த்தம் முடிந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்கா. நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி . சோனாக் முதலில் ஆடை வடிவமைப்பாளராக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அனுஷ்கா செட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

- Advertisement -

சோனாக்ஷி திரைப்பயணம்:

மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் சோனாக்ஷி தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான். இவர் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த தேவதையாக இருந்தாலும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் பாலிவுட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்தார்.

தபாங் 3 படம் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானின் “தபாங் 3” என்ற படத்தில் நடிகை சோனாக்ஷி கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி இருந்தது. அதோடு தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அதில் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், விடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.

-விளம்பரம்-

சோனாக்ஷி பதிவிட்ட பதிவு:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது சோனாக்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், சோனாக்ஷி தனது கையில் வைர மோதிரம் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களில் ஆண் ஒருவர் அவரது கையைப் பிடித்து இருக்கிறார். மேலும், இந்த புகைப்படத்தை பதிவிட்டு சோனாக்ஷி கூறியிருப்பது, “BIG day for me!!! One of my biggest dreams is coming truuuue and i cant wait to share it with YOUUUU. Cant believe it was SO EZI” என்று கூறி இருக்கிறார்.

சோனாக்ஷி நிச்சயதார்த்தம்:

இதன்மூலம் சோனாக்ஷிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று சோஷியல் மீடியாவில் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சோனாக்ஷி உடனிருக்கும் ஆண் யார்? சோனாக்ஷி யாரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்? என்று பல குழப்பத்திலும் கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர், சோனாக்ஷி Zaheer Iqbal, Bunty Sachdeva,Aditya Roy Kapur,Shahid Kapoor என்று பலரை காதலித்ததாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. இதில் யாரை சோனாக்ஷி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பேதே சஸ்பென்ஸ்.

Advertisement