கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது தலை விரித்து ஆடுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

Advertisement

இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நிலீஷ் என்ற 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் ட்விட்டரில் சோனு சூட்திடம் ரூபாய் 28,000 பிளே ஸ்டேஷன் கேம் கன்சோல் ஒன்றை கேட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட அந்த சிறுவன், ‘தயவுசெய்து எனக்கு ஒரு பிஎஸ் 4 வாங்கித் தரமுடியுமா? ஊரடங்கில் என்னைச் சுற்றியுள்ள சிறுவர்கள் எல்லாம் வீடியோ கேம் விளையாடி மகிழ்கின்றனர். எனக்கு தயவுசெய்து உதவி செய்யவும்’என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சோனு சூட், உங்களிடம் பிஎஸ் 4 இல்லையென்றால் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். நான் அதற்கு உங்களுக்கு உதவுகிறேன்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

Advertisement
Advertisement