ரசிகர்கள் எதிர்பார்த்த ‘சூது கவ்வும் 2’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
163
- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உட்பட பலர் நடித்து வெளியான கல்ட் படம் ‘சூது கவ்வும்’. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்லா வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சூது கவ்வும் 2’ இயக்குனர் எஸ்.ஜே அர்ஜுன் இயக்கியிருக்கிறார். மிர்ச்சி சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் நடித்து இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா ?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

முதல் பாகம் நடைபெறும் அதே யுனிவர்சில் தான் இந்த இரண்டாம் பாகமும் நடைபெறுகிறது. சூது கவ்வும் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கருணாகரன் அரசியல் என்ட்ரி கொடுத்திருப்பார். தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார். ஊழல் செய்வதையே அரசியலாக வைத்திருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறார். இதற்கிடையே முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வருவது போல், இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளைக் கொண்டு மிர்ச்சி சிவா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.

- Advertisement -

அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிதி அமைச்சர் கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்த, அதன் பின் என்ன நடக்கிறது? எதற்காக கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்துகிறார்? தனக்கு இருக்கும் பிரச்சனைகளில் இருந்து கருணாகரன் விடுபட்டாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை. முதல் பாகத்தில் வரும் பல காட்சிகளை அப்படியே இரண்டாம் பாகத்திலும் ரீ கிரியேட் செய்துள்ளனர். அதனால் முதல் பாகம் ஏற்படுத்திய அந்த தாக்கம் இதில் துளியும் ஏற்படவில்லை.

கூடவே, அந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நடிகர்கள் மட்டும் மாறி இந்த படத்திலும் அப்படியே வருவதால் புது படம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படவில்லை. முதல் பாகத்தில் இடம் பெற்ற கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, அருள்தாஸ், சைக்கோ போலீஸ் கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால், எந்த கதாபாத்திரமும் நம்மிடையே எந்த உணர்வையும் கடத்தவில்லை. மேலும், படத்தில் கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா மற்றும் அவர் கேங்கில் இருக்கும் நபர்கள் செய்யும் நகைச்சுவை, சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்க வைக்கிறது.

-விளம்பரம்-

அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள், அதில் வந்த நகைச்சுவையை இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் அழகாக வடிவமைத்திருந்தார். ஆனால், கதாபாத்திரங்களை இன்னும் வலுவாக அமைத்திருந்தால், படத்திற்கு பலம் சேர்த்திருக்கும். திரைக்கதையும் ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். முதல் பாகம் வெற்றி பெற காரணமே அதில் இருந்த புதுமை, பின்னணி இசை மற்றும் பாடல்கள் என்று கூறலாம். ஆனால் சூது கவ்வும் 2 படத்தில் பாடல்கள், பின்னணி இசை எதுவும் மனதை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதோட இப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கூட ஓகே ரகமாக தான் இருக்கிறது. சூது கவ்வும் 1 திரைப்படத்தை பார்க்காதவர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். சூது கவ்வும் 1 படத்தைப் பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றம்தான்.

நிறை :

மிர்ச்சி சிவாவின் காமெடி

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே

அரசியல் குறித்து இடம் பெற்று இருந்த வசனங்கள் சிறப்பு

குறை :

பின்னணி இசை

வலுவான திரைக்கதை இல்லை

எந்த கதாபாத்திரமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

மொத்தத்தில் ‘சூது கவ்வும் 2’ மிர்ச்சி சிவா சொன்னது போல் ‘ கழற்றுவதற்கு எதுவும் இல்லை’

Advertisement