சமீப காலமாகவே நடிகர் சூர்யா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ஜோதிகா தஞ்சை கோவில் விவகாரம் பொன்மகள் வந்தாள் தொடங்கி சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கை வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் விரைவில் ஓட்டிட்டு தளத்தில் வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா தான் தயாரித்து இருக்கிறார்.பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது.
ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது படத்தை OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த வரிகள் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .