சூரரை போற்று படத்தில் அப்துல் கலாமாக நடித்தது யார் தெரியுமா ? பாவம் அவரும் இப்போ உயிரோடு இல்ல.

0
31439
surya
- Advertisement -

பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.

- Advertisement -

இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாமை, சூர்யாவை சந்திப்பது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். அதே போல அப்துல் காலம் போல இந்த காட்சியில் பேசி இருப்பது kpy நவீன் தான் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இந்த காட்சியில் அப்துல் கலாமாக நடித்தது யார் என்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உடுமலைப்பேட்டையை சேர்ந்த இவர் பெயர் ஷேக் மைதீன் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் தோற்றத்தை அப்படியே கொண்டவர் மேலும் அவர் மீதான பற்றின் காரணமாக அவர்போலவே தன சிகை அலங்காரத்தையும் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டார்.

கலாம் ஐயா அவர்கள் மறைந்த போது ராமேஸ்வரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் அன்றுமுதல் உடுமலை கலாம் என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் வாழ்நாளில் மிகவும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக தான் பெரிதும் நேசித்த தலைமை டாக்டர் அப்துல் கலாம் தோற்றத்தில் சூரரைப்போற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதுவே தனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்துவிட்டார் போலும் தான் நடித்த படத்தை பார்க்கும் முன்பே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்கை எய்துவிட்டார் என்பது வருத்தமான செய்தி.

-விளம்பரம்-
Advertisement