இதனால் தான் OTT -யில் வெளியிட முடிவெடுத்தோம் – காரணத்தை பகிர்ந்த சூர்யா.

0
1065
soorarai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா தான் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தினை ott தளத்தில் வெளியிட்டுள்ளார் சூர்யா. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது படத்தை OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.

- Advertisement -

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. , இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா,

பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.மேலும், இந்தத் திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement