உனக்கெல்லாம் எவ்ளோ கொழுப்பு இருக்கும் – மீண்டும் சூரியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள். இது தான் காரணம்.

0
522
soori
- Advertisement -

நாடு முழுதும் இன்று 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்றவைகள் கடைபிடிக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதிலும் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து ரஜினி, விஜய், இளையராஜா, நடிகர் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் மோகன்ஜி, நிர்மலா சீதாராமன் உட்பட பல பிரபலங்கள் தங்களுடைய சோசியல் மீடியாவில் முகப்பு புகைப்படங்களை தேசியக் கொடியாக மாற்றி இருந்தனர். நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

- Advertisement -

75வது சுதந்திர தின விழா :

இது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் வகையில் மோடி கூறியிருந்தார். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேசப்பற்றை காண்பித்து இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. இதேபோல் பனையூரில் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலகத்திலும், விஜய் இல்லத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

தேசிய கொடி சர்ச்சையில் சிக்கிய சூரி :

மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி இருக்கின்றனர். இந்தி நடிகர் அமீர்கான் தனது வீட்டின் பால்கனியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இருக்கிறார். இயக்குனர் காஷ்மீர் பைல்ஸ் பட புகழ் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியும் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் காமெடி நடிகர் சூரியும் தன் வீட்டில் வீட்டில் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி :

அந்த புகைப்படத்தை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் சூரி. தற்போது அது சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது சூரி, தேசிய கொடியை வீடு துடைக்கும் மாப் குச்சியில் ஏற்றி இருப்பதாக பலரும் சூரிக்கு தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருமன் பட விழாவில் பேசிய சூரி ‘ஆயிரம் கோயில்களை கட்டுவதைவிட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பதே பல ஆண்டுகள் பேசும்.’ என்று கூறி இருந்தார்.

சூரி கொடுத்த விளக்கம் :

இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் தெரிவித்த சூரி ‘ஆயிரம் அன்ன சக்கரத்தை கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பது சிறந்தது என்று தான் நான் எதார்த்தமாக கூறியிருந்தேன்.ஆனால், யார் மனதையும் புண்படுத்துவதற்காக நான் அதை சொல்லவில்லை. நான் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். மதுரையில் நான் தொடங்கியுள்ள ஓட்டலுக்கு கூட அம்மன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். ஆனால், சிலர் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் எந்த கோயிலுக்கும் எதிரானவன் இல்லை. நான் படிக்கவில்லை. அதனால் எல்லோருக்கும் படிப்பு கொடுப்பது சிறந்தது என்று கூறினேன். மகாகவி பாரதியார், காமராஜ் போன்றவர்கள் சொன்னதைதான் நான் சொன்னேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement