சூரி கொடுத்த புகார்- விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்குப்பதிவு. என்ன நடந்தது ?

0
1267
vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் தந்தை மீது பணமோசடி புகார் அளித்திருக்கிறார். நடிகர் சூரிய மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து வெண்ணிலா கபடிகுழு, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில்விஷ்னு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பியுமான மேஷ் குட்வாலா மீது பண மோசடி புகாரை உறுதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன்  தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறியதாக தெரிகிறது. இதனடிப்படையில் நடிகர் சூரி இடம் பல்வேறு தவணை முறையில் 3.10 கோடி பெற்று சென்னையில் அடுத்த சிறுசேரியில் உள்ள இடம் ஒன்றை சூரி வாங்கியிருக்கிறார் .

- Advertisement -

ஆனால் நிலம் வாங்கிய பின்னர்தான் அந்த இடம் அரசு அங்கீகாரம் பெற்ற இடம் இல்லை என்று சூரிக்கு தெரியவர பின்னர் அந்த நிலம் குறித்து டிஜிபி ரமேஷிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை தருமாறு சூரிய கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொண்டுள்ள ரமேஷ் 40 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் 2.70 கோடி தராமல்இழுத்தடித்துள்ளார். இதனுடைய விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அவர் டிஜிபியாக இருந்த போது நிலப்பிரச்சினை என்று புகார் அளிக்க வந்த நபரிடம் 2.50 கோடி நிலத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து அதை மறுத்து 5.25 கோடிக்கு வாங்கியதாக ஆவணங்களை ஏற்பாடு செய்து பின்னர் அதற்கான போலி சான்றிதழை உருவாக்கி நடிகர் சூரியை ஏமாற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது.

இதனால் நடிகர் சூரி பணத்தை திருப்பி கேட்ட போது 40 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதியுள்ள 2.70 கோடி பணத்தை இரண்டு ஆண்டுகளாகியும் திருப்பிக் கொடுக்காததால் 2018 ஆம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சூரி. ஆனால் இது குறித்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. ரமேஷ் முன்னாள் டிஜிபி யாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி, அன்புவேல் , ராஜன் டிஜிபி ரமேஷ் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சூரியன் புகாரை ஏற்று ரமேஷ் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார் இதையடுத்து தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் டிஜிபி ரமேஷ் மீது 406 நம்பிக்கை மோசடி 420 பணமோசடி 465 போலியான ஆவணங்கள் தயாரித்தல் 468 ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்து 471 பொய்யானது உண்மை என நம்ப வைத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது

Advertisement