சமூக விழிப்புணர்வை செல்லும் சூரியின் கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
314
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூரி. சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில், தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. இந்த படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி, அன்னா பென் என்பவர் நடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்களில் வெளியாவதற்கு முன்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறது. மேலும், பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் கொட்டுக்காளி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ பாண்டி தன்னுடைய முறைப்பெண் மீனாவை 12-ஆம் வகுப்பு படித்து முடித்த உடனே திருமணம் செய்து கொள்ளாமல் கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரிக்கு சென்றவுடன் மீனா காதல் செய்கிறார். இதனால் பாண்டியை திருமணம் செய்து கொள்ள மீனா மறுக்கிறார். பின் மொத்த குடும்பமே அவருக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி, சாமியார் ஒருவரிடம் அழைத்து செல்கிறார்கள். அப்படி அவர்கள் அழைத்துச் செல்லும் பயணம் தான் படத்தின் கதை.

- Advertisement -

கடைசியில் மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? சூரியை திருமணம் செய்து கொண்டாரா? சூரி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் பாண்டி கதாபாத்திரத்தில் சூரி மிரட்டி இருக்கிறார். படத்தின் முழு கதையுமே சூரி சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக, அவர் கவ்விய தொண்டையுடன் பேசி நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இவரை அடுத்து மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார்.

எந்தளவிற்கு அடி, உதை வாங்க முடியுமோ அவர் அந்தளவிற்கு இந்த படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஓடுவதும், குடும்பங்கள் பயணிப்பதும் என்று இயக்குனர் கடைசிவரை கதையை பதட்டத்துடனே இயக்கி இருக்கின்றார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் பொண்ணுக்கு பேயோட்டும் காட்சியை விவரிக்கும் வகையில் சமூகத்திற்கு ஒரு நல்ல தகவலையும் இயக்குனர் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் முதல் பாதி பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை என்றாலும், இடைவெளிக்குப் பின் படம் நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. மேலும், இந்தப் படம் அனைத்து பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் நிறைவான கதையை கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். பெரிய அளவு மக்களை கவருமா? என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். இருந்தாலுமே, ஒரு வாழ்வியல் கதையை இயக்குனர் சொல்ல முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படம். ஒருமுறை சென்று பார்க்கும் படமாக கொட்டுக்காளி இருக்கிறது.

நிறை:

சூரி, அன்னா பென் நடிப்பு சூப்பர்.

ஒளிப்பதிவு, கிளைமாக்ஸ் காட்சி ஓகே

இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.

சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை.

குறை:

படத்தின் முதல் பாதி பொறுமையாக செல்கிறது.

கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்.

ஆங்காங்கே, சில லாஜிக் குறைபாடுகள்.

பாடல்கள், பின்னணி இசை இல்லாதது கொஞ்சம் குறை.

மொத்தத்தில் கொட்டுக்காளி- முயற்சி

Advertisement