வறுமையில் வாடி வரும் நடிகருக்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி பட நடிகர்.!

0
2230
Nandagopal

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகரான நந்த கோபால் உடல் நிலை சரியில்லாமல் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வருவதாக வீடியோ ஒன்றில் பேசி இருந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நந்த கோபாலை நேரில் சந்தித்து உதவியுள்ளார் துணை நடிகரான சவுந்தரராஜா.

நடிகர் சவுந்தரராஜா, நந்தகோபால், பிளாக் பாண்டி

பாக்யாராஜ் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தரகாண்டம்’ திரைப்படத்தில் பாக்கியராஜின் பள்ளி பருவ வகுப்பு தோழராக இருந்து பின்னர் அவரிடமே மாணவராக நமச்சிவாயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நந்தகோபால். அந்த படத்திற்கு பின்னர் பாக்கியராஜ் நடித்த ராசுக்குட்டி, சூப்பர் ஸ்டார் நடித்த அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : கணவர், தாலி பற்றியெல்லாம் பேசும் வனிதாவிற்கு எத்தனை கணவர் தெரியுமா.! 

- Advertisement -

பல படங்களில் தனது காமெடி நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நந்த கோபால் இன்று ஒரு வேலை சோற்றுக்காக கூட கஷ்டப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்த கோபால் தற்போது சென்னை கோடம்பத்தில் ஒரு சிறிய குடியிருப்பில் கவனிக்க ஆள் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார்.

47 வயதாகும் நந்த கோபால் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேட்டியில் பேசுகையில், எனக்கு பாதுகாப்பாக அக்காவும் அவரது கணவரும் தான் இருக்கிறார்கள். தற்போது உடல் நிலை சரியில்லாததால் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நடிகர் நந்த கோபாலின் நிலையை நடிகர் பிளாக் பாண்டி மூலம் அறிந்து கொண்டுள்ள நடிகர் சவுந்தரராஜா நந்தகோபாலை நேரில் கண்டு தன்னால் முடிந்த பண உதவியை செய்துள்ளார். மேலும், நந்தகோபாலிடம் பணத்தையும் பழத்தையும் கொடுத்த போது அவர் கண் கலங்கியபடி சீக்கிரம் குணமடைந்து நாம் சாதிக்க வேண்டும் என்று கூறியதை கேட்டு தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாக உருக்கமாக கூறியுள்ளார் சவுந்தரராஜா.

Advertisement