தீவிர சிகிச்சையில் இருந்து வரும் எஸ் பி பியின் லேட்டஸ்ட் புகைப்படம் – எப்படி இருக்கார் பாருங்க.

0
2171
spb
- Advertisement -

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

-விளம்பரம்-

இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனைஎடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது.

- Advertisement -

இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி இன் உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் எஸ்பிபி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது தந்தையின் நிலை குறித்து நடிகரும் பின்னணி பாடகருமான எஸ் பி சரண் விளக்கமளித்துள்ளார். அதில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து எஸ் பி பியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் முகத்தில் செயற்கை பிராண வாயு பொருத்தப்பட்டுள்ள எஸ் பி பி கட்டை விரலை காட்டி உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement