லாபம் படத்தின் இறுதி கட்டத்தில் இறந்த ஜனநாதன் – படம் வெளியாகுமா ? விஜய் சேதுபதி விளக்கம்.

0
1227

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குனர் ஜனநாதன் காலமான சம்பவம் திரைத்துறை பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகர் ஷாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தை தொடர்ந்து தமிழில் இவர், ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.இயற்கை திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.

தனது முதல் படமான இயற்கை படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார் ஜனநாதன். இறுதியாக ஜெயம்ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த ‘லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். ஜனநாதன் காலமானதால், அவர் இறுதியாக இயக்கி வந்த லாபம் படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இது குறித்து அந்த படத்தை தயாரித்து வரும் விஜய் சேதுபதி மற்றும் 7c’s Pvt Ltd மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் எஸ் பி ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும் ஒலிக்கும் போராட்ட குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது .அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்திற்கும் பொருந்தி போகக் கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்று தான் எங்கள் நிறுவனமும் விஜய்சேதுபதி படத்திலும் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம்.

இந்த படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன இந்த தருணத்தில் எங்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இன் மறைவு மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது அதே சமயம் எங்கள் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் லாபம் படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார் என்று இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினர் முடித்து வெளியிட உள்ளோம் அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

-விளம்பரம்-
Advertisement