பிரிந்த இரு துருவங்கள்..!இளையராஜா ராயல்டி விவகாரத்தில் எஸ் பி பி சொன்னது என்ன..!

0
832
spb
- Advertisement -

இளையராஜா தனது பாடல்களை பாடுபவர்கள் எனக்கு ராயல்டி தர வேண்டும் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையானால் சட்டப்படி குற்றமாகும். மேலும், என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

s-p-b-ilayaraja

- Advertisement -

மேலும், பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம், அந்த பத்திரத்தையும் இளையராஜா ஒப்படைத்துவிட்டார்.

இந்நிலையில் இளையராஜாவின் பாடல் காப்பீடு விவாகரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பி , இளையராஜாவுடன் பல படங்களில் வேலை செய்துள்ள எஸ் பி பி இளையராஜாவின் இசையில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார.

-விளம்பரம்-

சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்ன நடக்குமோ அது நடக்கட்டும்.இந்த விவகாரத்தில் தாம் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பின்னணி பாடகர் எஸ் பி பிக்கும் இளையராஜாவிற்கு ஏற்கனவே ராயல்டி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement