எஸ் பி பி இறந்துவிட்டதாக அறிவித்த பிரபல செய்தி சேனல் – எஸ் பி சரண் போட்ட ட்வீட்.

0
2646
spb
- Advertisement -

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியதால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். இந்த நிலையில் எஸ் பி பி இறந்துவிட்டதாக போலியான செய்தி ஒன்று வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த எஸ் பி பியின் மகனும் நடிகருமான எஸ் பி சரண், இது முற்றிலும் தவறான செய்தி. தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பட்டு வருவது உண்மை தான். ஆனால், அவர் நலமாக இருக்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். . இதையடுத்து போலியான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement