மீண்டும் இணைந்த எஸ் பி பி, இளையராஜா.! கட்டித்தழுவி பாசத்தை பகிரும் புகைப்படம்.!

0
422

கடந்த சில மாதத்திற்கு முன்னர் ராயல்டி விவகாரத்தில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பிகும் இசைஞானி இளையராஜவிற்கும் பனிப்போர் ஏற்பட்டது. எஸ் பி தனது அனுமதியில்லாமல் தன்னுடைய பாடல்களை பாடி பணம் சம்பாதிக்கிறார் என்று இளையராஜா கடிந்திருந்தார்.

மேலும், மேடைக் கச்சேரிகளில் தனது பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பாடுவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தனது குழுவுடன் சென்றிருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

- Advertisement -

மேலும், இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த எஸ் பி பி இரண்டு நாட்களுக்கு முன்பு இளையராஜாவின் நோட்டீஸ் கிடைத்ததாகவும் தனக்கு வந்தது போல பாடகி சித்ரா மற்றும் தனது மகன் சரண் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பலராலும் விமர்சிக்கபட்டது. பின்னர் கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இளையராஜா ராயல்டி கேட்டார் என்று பின்னர் தெரியவந்தது.

-விளம்பரம்-

ராயல்டி விவகாரதிற்கு பின்னர் எஸ் பி பியும் இளையராஜாவும் இனி சேர மாட்டார்கள் என்று ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜாவும் எஸ் பி பியும் கட்டி அணைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுன்ன.

Advertisement