பறிபோன ஹாலிவுட் வாய்ப்பு – சமந்தாவிற்கு பதில் மாற்றம் செய்யப்பட்ட இளம் நடிகை – யார் இந்த புது நடிகை ?

0
1712
- Advertisement -

ஹாலிவுட் படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு நடிகை ஸ்ரீலிலா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் 2019 ஆம் ஆண்டு கிஸ் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் என இரண்டு மொழிகளிலும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார். இப்படி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. தற்போது இவர் தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

ஸ்ரீலீலா திரைப்பயணம்:

அதேபோல் சமுத்திரகனியின் இயக்கத்தில் விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாட இருக்கிறார். இந்த படத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் பாடலுக்கு நடனமாட 60 லட்சம் ரூபாய் சம்பளமாக ஸ்ரீ லீலா கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பின் பாலகிருஷ்ணாவின் 108 வது படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்ரீலீலா நடிக்கும் படங்கள்:

அதேபோல் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படம், வக்கந்தம் வம்சி இயக்கத்தில் நிதின் நடிக்கும் படம், நவீன் பொலிஷெட்டியின் அனகநக ஒக ராஜு படம், விஜய் தேவரகொண்டாவின் 12வது படம் என பல படங்களில் வரிசையாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இப்படி தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீலீலா தான் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

ஸ்ரீலீலா நடிக்கும் ஹாலிவுட் படம்:

மேலும், இவர் தெலுங்கு மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றது. இந்நிலையில் நடிகை சமந்தாவை ஓரம் கட்டி ஸ்ரீலீலா ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ஸ்டோரி என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் தான் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முதலில் நடிக்க சமந்தா தான் கமிட் ஆகியிருந்தார். ஆனால், தற்போது ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய நடிகை:

மேலும், இந்த படத்தில் ஆங்கில நடிகர் விவேக் கர்லா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிலிப் ஜான்
இயக்குகிறார். இந்த படம் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபருக்கும் சென்னை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையை மையமாகக் கொண்ட படம். இப்படி முன்னாடி நடிகை சமந்தாவை பின்னுக்கு தள்ளி நடிகை ஸ்ரீலிலா ஹாலிவுட் சினிமாவில் நிலைநாட்டிற்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

Advertisement