சிம்புவை திருமணம் செஞ்சா நல்லா தான் இருக்கும், ஆனா – சிம்பு மீமை பகிர்ந்து தமிழ் சீரியல் நடிகை போட்ட பதிவு.

0
719
Sreenidhi
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

-விளம்பரம்-
sreenidhi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி.  இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வருபவர். தற்போது இவர்  நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : கடந்த மேவில் திருமணம் இந்த மேவில் வளைகாப்பு – தனது சீமந்த புகைப்படங்களை பகிர்ந்த சூர்யா பட நாயகி பிரணிதா.

- Advertisement -

வலிமை பட விமர்சனம் :

அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை.

திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் :

படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டுவருவதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சிம்பு குறித்து ஸ்ரீநிதி :

இப்படி அஜித் ரசிகர்களால் படாத பாடு பட்ட ஸ்ரீநிதி தற்போது சிம்பு குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில்  ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் ’நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பிய போது அதற்கு ’செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே’ என்று பதில் அளித்து இருந்தார்.

திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சிம்பு :

அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, ரஜினி மகள் ஐஸ்வர்யா, நயன்தாரா, ஹன்சிகா என்று பலரை காதலித்தார். ஆனால், எந்த காதலும் சிம்புவிற்கு நிலைக்கவில்லை. மேலும், சிம்புவின் தம்பி குறளரசனுக்கு கூட திருமணம் நடைபெற்றுவிட்டது. ஆனால், மூத்த மகன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவில்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் கூட வருத்தத்தில் ஆழ்ந்து இருந்தார்.

Advertisement