புத்தகங்களுடன் புதைக்கப்பட்ட ஸ்ரீமதியின் உடல் – மகள் மரணத்திற்கு அந்த 7 பேர் தான் காரணம் என தந்தை திட்டிகிடும் தகவல்.

0
1190
sreemathi
- Advertisement -

ஸ்ரீமதியின் மரணத்திற்கு 7 பேர் தான் காரணம் என்று ஸ்ரீமதி தந்தை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டது.

- Advertisement -

ஸ்ரீமதி மரணம்:

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் ஸ்ரீநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு:

இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று காலை 6.45 மணியளவில் பெற்றுக்கொண்டனர். பின் அவரின் சொந்த கிராமமான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அவரின் பெற்றோர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீமதியின் உடல் அடக்கம்:

அஞ்சலிக்கு பின் மாணவி ஸ்ரீமதியின் உடல் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் சில புத்தகங்களை அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு மனவேதனையுடன் ஸ்ரீமதியின் தந்தை பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவருடைய இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தூக்கு தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்க வேண்டும்.

மரணத்திற்கு 7 பேர் தான் காரணம்:

என் மகளின் இழப்பிற்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் மட்டுமே காரணம். எனக்கு வெளியில் எந்த ஒரு எதிரிகளோ, துரோகிகளோ கிடையாது. என் மகளின் சாவிற்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் தான். குறிப்பாக, அந்த ஏழு பேர் தான் என் மகளின் இறப்புக்கு காரணம். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு செய்த கொலை, தற்கொலை கிடையாது. வார்டன், ரெண்டு மூணு பள்ளி ஆசிரியர், பள்ளி ஓனர், ஓனர் மகன்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் என் மகளை கொன்று விட்டார்கள். என் மகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மனவேதனையுடன் ஸ்ரீமதியின் தந்தை கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement