ஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.! போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.!

0
328
srireddy

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட் டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களா ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி. தற்போது ஆந்திராவை விட்டுவிட்டு சென்னையில் தான் வருகிறார். மேலும், ரெட்டி டைரிஸ் என்ற படத்திலும் வருகிறார்.

சமீபத்தில் இவரது வீட்டில் ரெட்டி டைரி பைனான்சியர் சுப்பிரமணியம் என்பவர் இரவு வேலையில் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு , வீட்டில் இருந்த மேஜை, ஜன்னல் ஆகியவற்றை உடைத்தார் என்றும், தன்னிடமும் தவறாக நடக்க முயற்சித்தார் என்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையும் படியுங்க : பல நடிகர்களை பற்றி சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.! அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்க.! 

ஆனால், இந்த குற்றசாட்டை சுப்பிரமணியம் மறுத்ததால், ஸ்ரீரெட்டியை விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு வர சொல்லியுள்ளனர். ஆனால், அவர் மாலை வரை வரவும் இல்லயாம். அதன் பின்னர் மதுரைவாயல் காவல் நிலையத்தில் ஸ்ரீரெட்டியிடம் விசாரித்த போது, தான் தாக்கப்பட்டதாக கூறியது போய் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார் ஸ்ரீரெட்டி.