கிறீன் பார்க் ஹோட்டல் ஞாபம் இருக்கா ? உதயநிதி குறித்து சர்ச்சை பதிவு செய்த ஸ்ரீரெட்டி.

0
13036
Srireddy
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் கடந்த ஆண்டு நிர்வாண போராட்டத்தை நடத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையிலும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பல்வேறு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் என்று பல்வேறு நபர்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து விட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இதில் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த், ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்களும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்கள் என்று ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். கடந்த சில காலமாக சென்னையில் வசித்து வரும் ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதளங்களில் மிகவும் சரியான பதிவுகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா குறித்து மோசமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.

இதையும் பாருங்க : ஹாலிவுட் லெவலுக்கு சென்ற டிடி. அடிச்சது பாரு இப்படி ஒரு லுக்கு.

இந்தநிலையில் நடிகரும் பிரபல அரசியல் தலைவரின் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் பெயரையும் தன்னை ஏமாற்றியவர்கள் லிஸ்டில் சேர்த்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலின் குறித்து மிகவும் சர்ச்சையான விஷயம் ஒன்றே பதிவிட்டுள்ளார் .அதில், தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சார். மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற கதிர்வேலன் காதல் படத்தின் சூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலமாக சந்தித்தோம். நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அதன் பின்னர் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் நீங்கள் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பின்னர் நாம் இருவரும் நிறைய செய்து இருக்கிறோம் .

-விளம்பரம்-

ஆனால், இதுவரை எனக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை நான் கண்டிப்பாக என்னுடன் நீங்கள் இருந்ததை மறக்க மாட்டேன் நீங்கள் மிகவும் சிறந்தவர் சார் என்று பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் ‘சைக்கோ’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலின் குறித்து இப்படி ஒரு சர்ச்சையான பதிவை பதிவு உள்ளது அவரது திரைவாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் கவலை கொண்டுள்ளார்கள்.

Advertisement