அந்த நடிகர் வீட்டில் வெளிநாட்டு பொண்ணு இருக்கு. அவருக்கு கொரோனா இருக்கா ? ஸ்ரீரெட்டி சர்ச்சை.

0
34710
srireddy
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக சொல்லி தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி இருந்தார். பின் தெலுங்கு சினிமாவில் உள்ள சில பிரபலங்களின் பெயர்களை சொல்லி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் ஆதாரத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இது பல டோலிவுட் பிரபலங்களின் வயிற்றில் புளியை கரைத்து. இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார். பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

-விளம்பரம்-

- Advertisement -

அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து உள்ளார். தற்போது தான் இந்த ரெட்டி லீக்ஸ் அமைதியான நிலையில் மீண்டும் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இதையும் பாருங்க : தந்தையின் மரணத்திற்கு வரமுடியாத சூழலில் சிக்கியுள்ளார்களா விசுவின் மகள்கள்?

-விளம்பரம்-

ஆனால், இவர் இப்படி கூறியிருந்த குற்ற சாட்டை தமிழ்த் திரையுலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் நடிகர் பவன் கல்யாண் மீதும், அவரது மனைவி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் குறித்து எக்கச்சக்கமான புகார்களை கூறி இருந்தார்.

நடிகர் பவன் கல்யாணுக்கு நடந்த முதல் மற்றும் இரண்டாவது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அது அனைவருக்கும் தெரிந்தது. தற்போது பவன் கல்யாண் அவர்கள் மூன்றாவதாக ரஷ்யாவை சேர்ந்த அண்ணா லெஸ்நெவா என்ற நடிகையை திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூலில் கூறியிருப்பது, நடிகர் பவன் கல்யாண் தன்னுடைய வீட்டில் வெளிநாட்டு இளம் பெண்ணை வைத்து உள்ளார்.

Image result for sri reddy pawan kalyan

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் வியாதி வரவில்லையா?? என்று கேட்டு உள்ளார். இப்படி நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்ட இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தாறுமாறாக ஸ்ரீரெட்டியை வறுத்து எடுத்து உள்ளார்கள். மேலும், அனைவரும் சொல்ல முடியாத அளவிற்கு பச்சையாக திட்டி உள்ளார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் தனது வாழ்க்கையை மையப்படுத்தி வரும் ‘ரெட்டி டைரி’ என்ற கதையில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஒரு விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி தலையீட்டால் அந்த விஷயம் சர்ச்சையாகத் தான் இருக்கும் என்று சொல்லுமளவிற்கு சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement