உன்ன பாத்தாலே வாந்தி வருது.! Ngk பார்த்துவிட்டு ஸ்ரீரெட்டி பதிவிட்ட ஸ்டேட்டஸ்.!

0
1508
Srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நிர்வான போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு அழைத்த பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள Ngk படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் சாய் பல்லவியின் நடிப்பு சிறப்பாக உள்ளது என்றும் ராகுல் ப்ரீத் சிங் தான் மிகவும் மோசமாக நடித்துள்ளார், பார்த்தாலே வாந்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : குருவி படத்தால் சிறுவர்களால் மிகவும் அசிங்கபட்டேன்.! லொள்ளு சபா ஜீவா.

ஸ்ரீரெட்டி, ரகுல் ப்ரீத்தை இப்படி விமர்சித்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் #metoo விவகாரம் படு வைரலான போது ரகுல் ப்ரீத் சிங்கிடம், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அது போன்று நான் எதிர்கொண்டது இல்லை சிலர் விளம்பரத்திற்காக அப்படி செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பதிலால் கோபமடைந்த ஸ்ரீரெட்டி, நடிகைகளை இழிவாக நினைக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை நான் நேரில் கண்டால் செருப்பால் அடிப்பேன். இவ்வாறு அவர் பேசிகொண்டே இருந்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று அவருக்கு சமாதி கட்டி விடுவேன் என்று கடுமையாக பேசி இருந்தார்.

Advertisement