குருவி படத்தால் சிறுவர்களால் மிகவும் அசிங்கபட்டேன்.! லொள்ளு சபா ஜீவா.!

0
967
Jeeva
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகள் சினிமாவில் நுழைந்துள்ளனர். காமெடி நடிகர் சந்தானம் தொடங்கி யோகி பாபு வரை லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமே சினிமாவில் நுழைந்தனர். அந்த வகையில் காமெடி நடிகரான ஜீவாவும் ஒருவர்.

-விளம்பரம்-
ஜீவா

- Advertisement -

லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ள ஜீவா, விஜய் நடித்த குருவி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜீவா, குருவி படத்தின் படப்பிடிப்பின் போது சிறுவர்களால் ஏற்பட்ட தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

‘குருவி’ படம் வந்தபோது நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது. படத்தில் விவேக் சார்கிட்ட இருந்து பேக்கைத் திருடிட்டு ஓடிடுவேன். பிறகு என்னைக் கண்டுபிடிச்சு, அடிச்சுத் துவம்சம் பண்ணிடுவாங்க. அந்தப் படம் வெளியான பிறகு, ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போனேன். அங்கே வேலை பார்த்துக்கிட்டிருந்த சின்ன பசங்க நான் எந்த சந்துக்குப் போனாலும், என் பின்னாடியே வந்தாங்க.

-விளம்பரம்-

அப்புறம் நான் அந்த பசங்களிடம் ‘ஏன்டா என்னை இப்படி ஃபாலோ பண்றீங்க’னு கேட்டேன். ‘நீங்கதான் பேக்கைத் திருடிட்டுப் போயிடுவீங்களே!’னு சொன்னாங்க. எனக்கு ஷாக் ஆகிடுச்சு. சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்”  என்று கூறியுள்ளார்.

Advertisement