இந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! குஷியில் ரசிகர்கள்.! யார் தெரியுமா..?

0
1184
kamal
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எலிமினேஷன் கட்டத்தை நெருங்கவுள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகள் துவங்கிவிட்ட நிலையில் தற்போது ஆண்கள் ஒரு புரமும் பெண்கள் ஒரு புரமுமாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஒருவர் வரவிருக்கிறாராம்.

-விளம்பரம்-

bigg-boss

- Advertisement -

பிக் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சில பிரபலங்களை பிக் வீட்டினுள் அனுப்பி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டி விடுகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டினுள் நடிகர் கமலஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சிறப்பு கெஸ்ட்டாக விசிட் அடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே கமல் பங்குபெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய கோடிஸ்வரன் நிகழ்ச்சியிலும் ஸ்ருதி ஹாசன் பங்குபெற்றுள்ளார். தற்போது பிக் பாஸ் செட்டிற்குள் என்ட்ரியாக போகும் இவர், தனது தந்தையின் விஸ்வரூபம்-2 படத்திற்காக தான் வருகிறாராம்.

-விளம்பரம்-

sruthi-haasan

கமல் நடித்துள்ள “விஸ்வரூபம் 2” படத்தின் பாடல்களை பிக் பாஸ் மேடையில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டில் நடிகை ஸ்ருதி ஹாசன் மேடையில் நடனமாட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ருதி ஹாசனின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Advertisement