3 முட்டையின் விலை இத்தனை ஆயிரமாம். பில்லை பதிவிட்டு புலம்பிய இசையமைப்பாளர்.

0
2863
shekar
- Advertisement -

அஹமதாபாத்தில் 3 அவித்த முட்டைகளுக்கு அதிக ரூபாய் பில் கொடுத்ததால் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜியானி அதிர்ச்சி அடைந்தார். இப்போது இருக்கும் ட்ரெண்டிங் நியூஸ் இது தான். தற்போதிருக்கும் காலகட்டங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரீகம் ஆகிவிட்டது. அதிலும் சினிமா பிரபலங்களும், வேலைக்கு செல்பவர்களும் ஹோட்டலுக்கு செல்வது வழக்கமான ஒன்று தான். இதைப் புரிந்து கொண்டு ஹோட்டல் நிறுவனங்கள் சாப்பாட்டின் விலையை அதிகரித்தும், பில்லை அதிகமாக தீட்டியும் வைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சில நேரங்களில் சாப்பிட்டு விட்டு பில்லை பார்த்தால் நெஞ்சு வெளியே வந்து விடும். ஏன்னா,அந்த அளவிற்கு பில் போட்டு தீட்டி வைப்பார்கள். மேலும், இவ்வளவு பில்லா? எனக் கேட்டு கேட்டு மாய்ந்து போவோம்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஒருவர் 3 அவித்த முட்டைகளின் பில்லை பார்த்து தலை சுற்றிப் போய் உள்ளார். இந்தியாவில் ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமானவர் சேகர் ராவ்ஜியானி. மேலும்,இவர் பாலிவுட்டில் ஓம் சாந்தி ஹோம், வார் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் உள்ள பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பாலிவுட்டில் திரைப்படங்களில் பிரபல இசையமைப்பாளர் விஷாலுடன் இணைந்து பல பாடல்களை இசை அமைத்துள்ளார்.

இவர்களை விஷால்-சேகர் ஜோடி என்று தான் அழைப்பார்கள். இந்த நிலையில் சேகர் அகமதாபாத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவு சாப்பிட சென்று உள்ளார். அப்போது அவர் மூன்று அவித்த மூட்டையை ஆர்டர் செய்திருக்கிறார். பின் அங்கு மூன்று அவித்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு பில்லை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து உள்ளார். ஏனென்றால் 3 அவித்த முட்டைகளுக்கு 1,672 ரூபாய் என போடப்பட்டிருந்தது. மேலும், அந்த மூன்று அவித்த முட்டைகளுக்கு 1350 ரூபாய் விலை என்றும், ஜிஎஸ்டி உடன் சேர்த்து 1672 ஆகிவிட்டதாக ஹோட்டல் நிறுவனம் கூறினார்கள். பின் அவர் தன்னுடைய பில்லை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், 3 அவித்த முட்டையின் விலை 1672 ரூபாயா??? என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு இவர் பதிவிட்டுள்ள பில் புகைப்படமும், கருத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதை பார்த்து சில பேர் கிண்டல், கேலியும் செய்து வருகின்றனர். சில பேர் சீரியஸாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி என்ற பெயரில் சாப்பிடும் உணவுகளின் விலையை அதிகரித்து வைப்பது மிகவும் தவறானது என்றும், இப்படியே சென்றால் இந்தியாவின் நிலைமை என்ன? ஆகும் என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதே மாதிரி ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் போஸ்கும் நடந்தது. அது அவர் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டதற்கு ஜிஎஸ்டி உடன் சேர்த்து 300 ரூபாய் விலை போட்டுவிட்டார்கள். மேலும், அவர் இதை பதிவிட்டு இருந்தார். அந்த சம்பவம் மக்களிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விவாதமாக மாறியது. ஹோட்டலுக்கு 25000 ரூபாய் அபராதமும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ஒருவர் சேகரின் முட்டை போட்ட கோழி ராகுல் சாப்பிட்ட ஹோட்டலின் காஸ்லியான வாழைப்பழத்தை சாப்பிட்டு இருக்கும் என விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சேகரின் 3 அவித்த முட்டைகளுக்கு போடப்பட்ட பில்லினால் என்ன பிரச்சனை ஏற்படும் என்று தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement