தற்போது கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஸ்டார். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 10-ம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது விழாவில் இயக்குனரின் தந்தையும் நடிகருமான ராஜா ராணி பாண்டியன், என்னை சினிமா துறைக்கு அழைத்து வந்தது ஸ்டில்ஸ் ரவி தான். மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்ற வள்ளுவரின் வாக்கு கேட்ப என் மகன் உயர்த்தி விட்டான். அவன் சின்ன வயதிலேயே பேண்சி டிரஸ் போட்டிகளில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு போவேன். இதை பார்த்த நளினி என்னிடம், உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலம் தீர்த்துக் கொள்கிறாயா? என்று கிண்டல் அடிப்பார்.

Advertisement

ஸ்டார் பட செய்தியாளர் சந்திப்பு:

ஒருமுறை என் மகன் வீரசிவாஜி வேடம் அணிந்து இருந்தான். அப்போது அவன் தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கி பிடித்தேன். உடனே அவன், மேடையில் நீங்கள் தாங்கி பிடிப்பீர்களா? என்று கேட்டு என்னுடைய கையை எடுத்து விட்டான். அந்தளவிற்கு அவன் தன்னை தயார்படுத்துகிறான். நடிப்பு மட்டுமில்லாமல் கல்வியிலும் என்னுடைய மகன் நம்பிக்கையோடு போராடினான். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகுதான் என்னை வைத்து அவன் குறும்படம் இயக்கினான். நான் படிப்பு முடித்த பிறகு தான் சினிமாவிற்கு வரவேண்டும் என்று கட்டளை போட்டேன்.

அதை ஏற்று அவன் பட்டதாரியும் ஆனான். படிப்பு முடித்த பிறகு ஒரே வருடத்தில் அவன் இயக்குனர் ஆகி விட்டான். இதை நான் சொல்வதற்கு காரணம், பெற்றோர்கள் பிள்ளைகளுடைய விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் என் மகனுக்கு வாய்ப்பளித்தேன். அவன் அதை பயன்படுத்தி இயக்குனராகி விட்டார். அதே நான் அவனுடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்து இருந்தால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். நான் ஸ்டில்ஸ் ரவி இடம் உதவியாளராக இருந்தபோது ஸ்டில்ஸ் போட்டோகிராபராக ஒரு படத்தில் பணியாற்றி இருந்தேன்.

Advertisement

சினிமா வாழ்க்கை குறித்து சொன்னது:

அதன் பின் தான் நடிகர் ஆனேன். அப்போது ஒருவர் வந்து உன் மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்கு நிற்காத போயா என்று சொன்னார். அதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் அழுது இருப்பேன். எல்லோரும் சினிமாவை நோக்கி தான் வருகிறார்கள். பலர் தொழிலதிபராக வேண்டும், பலர் உச்சத்தில் தொட வேண்டும், சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், சினிமாவில் சிலர்தான் வெற்றி அடைகிறார்கள். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள் தான் சென்றடைகிறார்கள்.

சினிமா அனுபவம் குறித்து சொன்னது:

இந்த துறையில் இயக்குனராக வெற்றி பெறுவது மகிழ்ச்சி தான். ராஜா ராணி படம் பண்ணும் போது நான் போட்டோகிராபர். 75 ஆயிரம் சம்பளம் என்று சொல்லிப் போட்டோகிராபராக என்னை கூப்பிட்டார். அதற்கு நான் சத்யராஜ் நயன்தாரா படத்தில் நடிக்க போறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். 3000 சம்பளத்திற்கு ராஜா ராணியில் நடித்தேன். அப்போது அட்லீ இடம் குறும்படத்தில் 5000 கொடுக்கிறாங்க நீங்க வெறும் 3900 தானே தருகிறீர்கள் என்று கேட்டேன். உடனே இந்த படம் வெளியான பிறகு நீங்கள் நிறைய சம்பளம் வாங்குவீர்கள் என்று சொன்னார். அதன்படி நானும் நிறைய சம்பளம் வாங்குகிறேன். இந்த படத்தின் 100-வது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். பந்தா பாண்டியாக இருந்த என்னை ராஜா ராணி பாண்டியாக மாற்றினார்கள். ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுவதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement