விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம் – அப்படி என்ன சின்னம் கேட்டாங்க தெரியுமா?

0
578
VMI
- Advertisement -

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் ஆயுதமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.

-விளம்பரம்-

கோடிக்கணக்கான பேர் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள். இதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், விஜய் அரசியலுக்கு வராமல் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

- Advertisement -

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்:

இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

ஆடிப்போன அரசியல்வாதிகள்:

இவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போட்டால் அவ்வளவு தான் தலையில் துண்டை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று கூறும் வகையில் அரசியல் வட்டாரத்தில் நிலைமை இருந்தது. மேலும், முதல் தேர்தலிலேயே சிக்ஸர் அடித்ததால் விஜய்யும் மகிழ்ச்சியில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டியும் இருந்தார் விஜய். விஜய் உடைய புகைப்படத்தையும், கொடியை வைத்தே தேர்தலில் வெற்றியடைந்த நிலையில் விஜய்யே போட்டியிட்டால் நிச்சயம் காலங்காலமாக இருக்கும் அரசியல் கதிகலங்கி விடும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மோதும் விஜய் மக்கள் இயக்கம்:

இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வழக்கம்போல் இதில் அதிமுக, திமுக, பாஜக என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் பயங்கர குஷியில் உள்ளார்கள். மேலும், தேர்தல் குறித்து மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆட்டோ சின்னம் கேட்டு கோரிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தில் கட்சியையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்க முடியும் எனக்கூறி ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் எந்த சின்னத்தை பயன்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement