கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் நடித்த முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சமீரா. ஆனால், இவர் பாலிவுட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்தவர் சமீரா ரெட்டி. தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சிடிஸின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வேட்டை, அசல், நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து இருந்தார் சமீரா. இவர் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பார்த்தால் குடும்ப தலைவியாக மாறி விட்டார். பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் ஹிந்தி மொழியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அதிலேயும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டு விட்டார். பின்னர் நடிகை சமீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு முன்பும் பின்பும் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து சமீராரெட்டி நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், எப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் போன்ற கேள்விகளை நான் 35 வயதை நெருங்கும் போதே பலமுறை கேட்டிருக்கிறேன். தனது துணையை தேடும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் நாம் செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பப் பட்டியலில் இடம் பெற்று விடுவது மிகவும் அழுத்தம் தரக்கூடியது. நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை தங்களை எடை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டாலும் அதை ஏன் நிறுத்த வேண்டும் நிறுத்தக் கூடாது என்பதற்கும் அறிவுரை வழங்குவார்கள். சமீரா ரெட்டியின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.