இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதி ஒருவர், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்.

இதையும் பாருங்க :இந்த ரூவாய வச்சிக்க ஐயா’ சுருக்குப் பையில் இருந்த பணத்தை கொடுத்த பாட்டி – வீடியோவை கண்டு ‘முதியோர் இல்லம்’ கட்ட முடிவெடுத்த நடிகர்.

Advertisement

இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல பல நோயாளிகளுக்கு மருத்துவமனையில் போதிய பேட் வசதி கூட இல்லாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் கூட கொரோனா நோயால் இருந்த பலரை ஒரே இடத்தில் வைத்து எரித்த அவலமும் கூட நடைபெற்றது.

இப்படி ஒரு நிலையில் பிரியம் ஜோஷி என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து பதிவிடுவதை நிறுத்துங்கள் என்று கூறி பின்னர் ரசிகர்கள் திட்டி தீர்த்தத்தால் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் Influencer என்று சொல்லிக்கொள்ளும் இவரை இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், இந்த வைரசால் மிகவும் நொந்து போய்விட்டேன். தயவு செய்து சோசியல் மீடியா Influencerகள் ஹாஸ்பிடல் பற்றியும் பேட் பற்றியும் இன்ஜக்க்ஷன் இவையெல்லாம் பற்றியும் பதிவிடுவதை நிறுத்துங்கள். இதிலிருந்து எங்களுக்கு ஒரு இடைவெளி தேவை. உலகில் நடக்கும் பிற நல்ல மற்றும் உயிரோட்டமான விஷயங்களைப் பற்றி பேசலாம். இறக்கும் மக்களை பற்றி அல்ல. இதிலிருந்து நாம் மனதளவில் வெளியேற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர். இப்படி ஒரு இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்ட பிரியம், கொஞ்சம் நாளைக்கு முன்னடி தான் என்னுடைய பாட்டி இறந்து போய்ட்டாங்க. அதனால் தான் நான் அப்படி சொன்னேன் என்று பதிவிட்டு தனது பாட்டி மருத்துவமனையில் இருந்த போது அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement