நெஞ்சம் மறப்பதில்லை கதை என்னுடையது, நான் தான் செல்வாவிடம் கொடுத்தேன் – பிரபல நடன இயக்குனர் பேட்டி.

0
7279
selva
- Advertisement -

எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் இன்று (மார்ச் 5) வே;வெளியாகி இருக்கிறியாது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சிக்கலை சந்தித்து. எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமுக உடன்பாடு ஏற்படவே, நீதிமன்றத்தை நாடினார்கள். உடனடியாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி இன்று வெளியாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வ ராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ பழிவாங்கும் பேய் கதைகள் வந்திருக்கிறது. அதே ஒன் லைனை தான் இயக்குனர் செல்வராகவனும் இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார். இருப்பினும் தனது வித்யாசமான கதாபாத்திர வடிவமைப்பு, வித்யாசமான திரைக்கதை என்று இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் பிரபல நடன இயக்குனரான கல்யாண், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண் மாஸ்டர், செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தில் இருந்து பல படங்களில் அவருடன் பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியுள்ளதாவது, நெஞ்சம் மறப்பதில்லை கதை என்னுடையது இந்த படத்தை ரசிகர்கள் செல்வராகவனின் திரைக்கதை மூலம் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் நான் பல ஆண்டுகளாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் இதுதான் என்னுடைய முதல் கதை செல்வராகவனுடன் ஒரு படத்தை இயக்குவது பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன் இந்த படத்தை பற்றி சொன்னபோது அவர் தான் இந்த படத்தை இயக்க போவதாக கூறியிருந்தார் உடனே நான் அதற்கு சம்மதித்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன் செல்வராகவனை போல ஒரு மிகப் பெரிய இயக்குனர் என்னுடைய கதையை ஒப்புக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement