தமிழ் கன்னடா தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் முன்னனி நடிகராக திகழ்பவர் பிரகாஜ் ராஜ். இவர் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்து வருபவர். பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழக்கதை பற்றி இவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் கர்நாடகவில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் கர்நாடக மா.நிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதியில் உள்ள தனியார் கல்லூரியில் சினிமா வசனம், சினிமா, சமூகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சி பற்றி அறிந்த சில கல்லுரி மாணவர்கள் கல்லூரிக்கு தொடர்ப்பு இல்லாத ஒரு நிகழ்ச்சியை எப்படி இங்கு நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல் பிரகாஷ் ராஜ் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.பிரகாஷ் ராஜ் இங்கு வரக் கூடாது என்றும் அவர்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியின் வளாகம்முன் குவிந்த கல்லுரி மாணவர்கள் அவரது வருகையை தடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் இந்த போராட்டத்தை கைவிட கோரினர். ஆனாலும் அவர்கள் அதை கேட்க வில்லை. இதனையடுத்து மாணவர்களை தடுக்கும் நோக்கில் தடுப்புகளை அங்கு அமைத்து அவர்களை தடுத்தனர். இதன் பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜ் அங்கு வந்து சிறப்பு விருந்தினராக பேசிய பிறகு அவர் அங்கு இருந்து வெளியேறினார்.

Advertisement

பிரகாஷ் ராஜ் வந்து சென்ற பிறகு அவர் நின்று கொண்டிருந்த இடத்தை சுத்தம் செய்யும் வகையில் கோமியம் தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். இதனை அங்கு இருந்த மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றயுள்ளனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் போராட்டம் நடத்திய இடத்தில் மாணவர்கள் மட்டுமின்றி வேறு சில நபர்களும் அங்கு இருந்ததாக தெரிவித்தனர்.

ஆகையால் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிரகாஷ் ராஜ் மோடியின் அரசையும் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் ட்விட்டரில் அடிக்கடி #Justasking என்று குறிப்பிட்டு அடிக்கடி மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.                       

Advertisement