ரஜினி – கமல் படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் – கின்னஸ் சாதனை பெற்ற பிரபலம் ஜூடோ ரத்னம் காலமானார்

0
617
- Advertisement -

எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் இருந்தே தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாக இருந்து வரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த போன்றவர்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்து தன்னுடைய அதிரடியான சண்டைக்காட்சிகளை கொடுக்கும் திறமையினால் ரசிகர்களை கவர்ந்தவர் கே.கே ரத்தினம். இவர் தற்போது தன்னுடைய 95 வது வயதில் காலமானார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சினிமா அறிமுகம் :

இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை சேர்ந்தவர். தன்னுடைய திரை பயணத்தை 1959ஆம் ஆண்டு வெளியான தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் 1966ஆம் ஆண்டு வெளியான ஒருவன் படத்தில் மூலம் சண்டை பயிற்சியாளராக மாறினார். அந்த காலத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், சரத்குமார் என பலரின் படங்களில் சட்டை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

1500க்கும் மேற்பட்ட படங்கள் :

மேலும் இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இவர் 1500க்கும் மேற்பட்ட படங்களில் சட்டை இயக்குனராக இருந்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் தளபதி தினேஷ், சூப்பர் சுப்பராயன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் போன்றோர் இவரிடம் பணியாற்றி வந்தவர்கள் தான். மேலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரராகிய ரஜினிகாந்தி நடித்த படங்களில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட படங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

தலைநகரம் படம் :

இப்படி பல படங்களில் சட்டை பயிற்சியாளராக இருந்த இவர் கடைசியாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாகவும், நடிகை ஜோதிர்மையி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். அதோடு வைகை புயல் வடிவேலு, பிரகாஷ்ராஜ், மயில் சாமி, மனோ பாலா, சோனியா, கே.எஸ் ரவிக்குமார் என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

ஜூடோ ரத்தினம் மறைவு :

இந்த நிலையில் சென்னையில் வசிது வந்த இவர் சினிமா துறையில் எடுத்த ஓய்வுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊரான குடியாத்தம் தரணம் பேட்டைக்கே திரும்பி சென்று வசித்து வந்தார். இப்படி பட்ட நிலையில் தான் 95 வயதாகும் இவர் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகம் சாரிப்பில் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். behind talkies செய்தி ஊடகம் சாரிப்பிலும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மேலும் 95 வயதாகும் இவருக்கு 17 குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Advertisement