லாரன்ஸின் ‘துர்கா’ படத்தில் இருந்து விலகிய இரட்டையர் இயக்குனர்கள், காரணத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் போட்ட பதிவு.

0
406
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிகராக கலக்கி கொண்டு வருகிறார். மேலும், இவர் தற்போது நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் லாரன்ஸ் என்று சொன்னாலே காஞ்சனா படம் தான் அனைவர்க்கும் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு நகைச்சுவை வகையில் பேய் படங்களை தந்தவர். முனி,காஞ்சனா 1,2,3 என்ற வரிசையாக படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். அது போல ருத்திரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் வெற்றிமாறன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ என்ற படத்திலும் ராகவா லாரண்ஸ் நடித்து வருகிறார். தற்போது தமிழில் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் லாரன்ஸ். இவர் அடுத்து படம் இயக்கினால் அதுவும் காஞ்சனா சீரிஸாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இதற்கு சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் நல்ல விதமாக கமெண்டுகளை போட்டு இருந்தார்கள். மேலும், இந்த படத்தை கேஜிஎப் படத்திற்காக தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு தான் இயக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் லாரன்ஸ் கூறியது,

ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா:

ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் கீழ் துர்கா படத்தில் இயக்குனர்களாக நமது புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு அவர்களை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இது ஒரு பவர் பேக் படமாக இருக்கும். உங்கள் அனைவரின் ஆசையும் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த படம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அப்போது காஞ்சனா படங்களை போல இந்த படமும் திகில் கலந்த நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும், ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

-விளம்பரம்-

துர்கா பட இயக்குனர் விலகல்:

இந்த படத்தில் பெரிய அளவிலான தொழில் நுட்ப கலைஞர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து இயக்குனர் அன்பறிவு விலகிக் கொள்வதாக அறிவித்திருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, நாங்கள் இயக்குனர்களாக வேண்டும் என்பதற்காகவே சினிமா துறைக்கு வந்தோம். தற்போது இயக்குனர்களாக இருந்து வருகிறோம்.

துர்கா படத்தில் விலகிய காரணம்:

ராகவா லாரன்ஸ் அவரது தயாரிப்பில் உருவாகும் துர்கா படத்தில் இயக்குனர்களாக எங்களை அழைத்தார். நாங்களும் இதனை மகிழ்ச்சி உடனே ஏற்றுக் கொண்டோம். ஆனால், ஏற்கனவே ஸ்டண்ட் மாஸ்டராக கமிட்டான படங்களின் வேலைகள் நிறைய உள்ளதால் துர்கா படத்தில் எங்களால் தொடர முடியவில்லை. எங்களின் இந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு உதவியால் ராகவா லாரன்ஸ் அவர்களுக்க மிகப்பெரிய நன்றிகள். இயக்குனராக இந்த படத்தில் இருந்து வெளியேறினாலும் நாங்கள் இந்த படத்தில் எப்போதும் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இவர்கள் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதற்கு பலரும் வருத்தத்துடன் கமெண்டுகளை போட்டிருந்தார்கள்.

லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட பதிவு:

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இது உங்களுக்கு எவ்வளவு கடினமான முடிவு என்பதை நான் தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்கிறேன். உங்கள் சினிமா ஆர்வம் மிக விரைவில் உங்களை இயக்கத்திற்கு அழைத்து செல்லும் ஆல் தி பெஸ்ட் என்று கூறி இருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் துர்கா படத்திற்கு யார் இயக்குனராக வரப்போகிறார்கள்? இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவாரா? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்தவண்ணம் உள்ளன. இதற்கு ராகவா லாரன்ஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement