முதன் முறையாக நீச்சல் உடையில் ஸ்வாதி. ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.

0
38885
Swathi-reddy-Actress
- Advertisement -

இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “சுப்பிரமணியபுரம்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர் ந நடிகை ஸ்வாதி. முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “டேஞ்சர்” படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதுவரை தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் ” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை. இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘திரு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : மகனை பிரிந்து 11 ஆண்டுகள். சமீபத்தில் தான் பிரபுதேவா மகனின் நினைவு நாள் சென்றுள்ளது.

- Advertisement -

தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டு ஸ்வாதி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இந்தோனேசியாவில் செட்டில்ஆகிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்க்கு பேட்டி கொடுத்துள்ளார் ஸ்வாதி. அந்த பேட்டியை பார்த்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அந்த பேட்டியில் ஸ்வாதி நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பேட்டியை கண்ட ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர். அதற்கு காரணமே, நடிகை ஸ்வாதி இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சியாக நடித்ததே இல்லை. அவ்வளவு ஏன் இதுவரை நடிகை ஸ்வாதி முத்த காட்சியில் கூட நடித்தது இல்லை. எனவே, ஸ்வாதியை இதுவரை இப்படி ஒரு கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் கொஞ்சம் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Video Credit : Tv9 Telugu

Advertisement