மகனை பிரிந்து 11 ஆண்டுகள். சமீபத்தில் தான் பிரபுதேவா மகனின் நினைவு நாள் சென்றுள்ளது.

0
14541
prabhudeva-son
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரபு தேவா. நடிகர் பிரபு தேவாவின் மகன் இறந்ததை குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது. அதோடு பிரபு தேவா மகனின் இறப்பு பார்த்தால் பாறை மனமும் உருகும் என்பது போல மிக கொடூரமாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் நடன இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரபு தேவா. அதுமட்டும் இல்லாமல் இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனும் ஆவார். இவருடைய நடன திறமையை பார்த்து அனைவரும் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ என்று அழைத்தார்கள். இதற்குப் பிறகு தான் பிரபு தேவா அவர்கள் படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அதோடு அவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் அளவிற்கு ஹிட் கொடுத்தது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

தற்போது பிரபு தேவா அவர்கள் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து உள்ளார். மேலும், இவர் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு போன்று பல படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப் படங்களையும் இயக்கி வருகிறார். இவர் என்ன தான் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவு பண்ணுவதை எப்போதும் மறக்க மாட்டார். இவருடைய மனைவி லதா. இவருக்கு 3 மகன்கள் இருந்தார்கள். அதில் ஒரு மகனின் பெயர் தான் விஷால். நடிகர் பிரபு தேவா அவர்கள் படங்களில் பிசியாக நடித்து இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்வார். இப்படி நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது பிரபு தேவா வாழ்க்கையில் மிகப் பெரிய புயல் ஒன்று வந்தது.

இதையும் பாருங்க : ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மகள் சௌந்தர்யா ஆரம்பித்த தொழில். என்னனு பாருங்க.

விஷாலுக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பதாக தெரிய வந்தது. இதனால் பிரபு தேவாவின் ஒட்டு மொத்த குடும்பமும் கவலையில் அதிர்ந்து போனது. எப்படியாவது தன் மகனை காப்பாற்ற வேண்டும் என பிரபு தேவா அவர்கள் பல மாதங்களாக போராடினார். மேலும், தீவிர சிகிச்சையில் விஷாலை வைத்து மருத்துவம் செய்து வந்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விஷாலை காப்பாற்ற முடியாமல் போனது. பின் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி விஷால் அனியாயமாக உயிர் இழந்தார். இதனால் பெரிய அளவு நடிகர் பிரபு தேவா தான் பாதிக்கப்பட்டார். அதோடு ஒட்டு மொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது. பின் தன் மகனின் இழப்பில் இருந்து பிரபு தேவாவை திசை திருப்பியது அவருடைய வேலை தான்.

-விளம்பரம்-
Image result for prabhudeva son death

தன் மகன் நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்காக இவர் தொடர்ந்து படப் பிடிப்புகளில் இருந்து வருகிறார். என்ன தான் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தாலும் பெற்ற மகன் இழப்பு மறக்க முடியுமா?? மேலும், அப்பாவின் கண் முன்னே பெற்ற மகனின் உயிர் பிரிந்து போவதைபார்ப்பது கொடுமையான விஷயம். இந்த மாதிரி நிகழ்வு யாருக்கும் நிகழ கூடாது. தற்போது பிரபு தேவா அவர்கள் கருப்பு வெள்ளை ராஜா, தபங்க் 3, ஊமை விழிகள், பொன் மாணிக்கவேல் என பல படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்த படங்கள் எல்லாம் அடுத்த வருடம் திரையரங்கிற்கு வரும் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement