என் அம்மா செத்துட்டாங்கனு சொன்னாங்க, தாலிய எடுக்கும் போது மூச்சி விட்றத நான் பாத்துட்டு – சிறு வயதில் ஏற்பட்ட விபத்து குறித்து சுதா சந்திரன்.

0
2418
sudha
- Advertisement -

இந்திய திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுதா சந்திரன். இவர் நடிகை மட்டுமில்லாமல் மிக சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். நடிகை சுதா சந்திரன் அவர்கள் விபத்து ஒன்றில் தன்னுடைய காலை இழந்து பின் செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்தி உள்ளார். இருந்தாலும் இவர் பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி சாதனை படைத்துள்ளார்.சுதாவுக்கு 3 வயது இருக்கும்போதே அவருக்குள் இருந்த நடனத் திறமையை கண்டறிந்த அவரது பெற்றோர், முறையாக பயில நடன வகுப்புகளுக்கு அனுப்பினர். அரங்கேற்றம் முடித்த அவர், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடத் தொடங்கினார்.

-விளம்பரம்-

பின்னர் மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த சுதா சந்திரனின் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. 1981-ல் புனிதா யாத்திரை சென்றிருக்கும் போது, அவர் திருச்சி அருகே விபத்து ஒன்றை சந்தித்தார். இதனால் வலது காலின் ஒரு பகுதியை இழக்க நேரிட்டது.  நம்பிக்கையை இழக்காத சுதா சந்திரன், காலை அகற்றிவிட்டு, ஜெய்ப்பூரில் செயற்கை காலைப் பொருத்திக் கொண்டார். அத்துடன் தனது நடன பயணத்தையும் நிறுத்தவில்லை.

- Advertisement -

தொடர்ந்து பல மேடைகளில் அரங்கேற்றம் செய்து சிறந்த டான்சராக பெயர் எடுத்தார் சுதா. மேலும், இவர் நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருப்பதோடு தற்போதும் அடிக்கடி நடனமாடி வருகிறார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த இவர் இந்தியில் இருந்து டப் செய்யப்பட்ட நாகினி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதை தொடர்ந்து தமிழில் நேரடி தொடர்களில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் அமைச்சர் ரோலில் நடித்திருந்தார் சுதா.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுதா தனக்கு நேர்ந்த கோர விபத்து குறித்து பேசி இருக்கிறார். திருச்சி அருகில் தான் அந்த விபத்து நடந்தது. அப்போது என்னை திருச்சி அரசு மருத்துவமனையில் தான் சேர்த்து இருந்தார்கள். அந்த விபத்தில் குறைவான அடிபட்டது எனக்கு மட்டும்தான். உங்க அம்மா இறந்து விட்டார்கள் என்று போலீஸ் சொன்னார்கள். அவரிடம் இருந்து தாலியை எடுக்கலாம் என்று சென்றபோதுதான். அவர் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். பின்னர் நான் தான் அம்மாவையும் அப்பாவையும் ஆம்புலன்ஸில் ஏற்றினேன். ஆனால், மூன்று நாள் கழித்து தான் அப்பாவும் அம்மாவும் என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியும்.

-விளம்பரம்-

ஏனென்றால் என்னை குழந்தைகள் வாடிலும் அம்மாவை பெண்கள் வார்டிடும் சேர்த்து இருந்தார்கள் அப்பாவை ஆண்கள் வார்டில் சேர்த்து இருந்தார்கள். ஏழு நாள் கழித்து ஒரு குடும்பம் சந்திக்கும் போது என் அப்பா அம்மா உயிரோடு இருக்கிறார் என்பதை எனக்குத் தெரியும். என்னை சிறுவயதில் இருந்து அவ்வளவு அழகாக வளர்த்தார்கள். ஆனால், அந்த இரவு அந்த விபத்திற்கு பின்னர் என்னுடைய முகம் அப்படி ஒரு அசிங்கமாக இருந்தது. அப்போது புரிந்து கொண்டேன் இதுதான் வாழ்க்கை என்று இதெல்லாம் நடக்கும் என்று அறியாத ஒரு சின்ன வயதில் இருந்தேன்.

ஆனால், அந்த ஒரு இரவில் நான் மெச்சூர் ஆகிவிட்டேன். எனக்கு விபத்து ஏற்பட்டு என்னுடைய காலை இழப்பேன் என்றெல்லாம் நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், அந்த விபத்தில் என் வாழ்க்கைக்கான பாடத்தை ஒரு இரவில் கற்றுக் கொடுத்து விட்டது. இந்த விபத்தில் எனக்கு டெல்லியில் இருந்து வந்த ஒரு நான்கு பேர் தான் உதவி செய்திருந்தார்கள். அவர்கள் யார் என்ன என்பது எனக்கு எனக்கு தெரியாது. அந்த நாலு பேரில் ஒருவர் விளையாட்டு வீரர் அவர் திருச்சியில் இருந்து சமயபுரம் வரை ஓடி சென்று ஆம்புலன்ஸை அழைத்து வந்தார். அவர்கள் யாரையுமே நான் சந்தித்தது இல்லை அவர்கள் எங்காவது இருந்தால் அவர்களை சந்தித்து நான் நன்றி சொல்ல வேண்டும்

Advertisement