தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருது பெற்ற சுகி சிவம் எழுத்தாளர், இந்து சமயச் சொற்பொழிவாளர் என பன்முகங்களை கொண்டவர், இவரின் உண்மையான பெயர் சுப்ரமணியம் சதாசிவம். இவர் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். அதோடு சன் டிவியில் ஒளிபரப்பான “இந்த நாள் இனிய நாள்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த மூலம் இவர் அதிகம் பிரபலமானார். அதே போல பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் தொடர்த்து பல மேடை நிகழ்ச்சிகளில் பேசி வரும் சுகி சிவம் சமிபத்தில் நெல்லையில் நடைபெற்ற இந்து அறநிலைத்துறை கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து கருத்து கேட்போர் கூட்டத்தில் உறுப்பினராக கலந்து கொண்டார். இந்த கூட்டம் நெல்லையில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி அடிகளார், பொன்னம்பல அடிகளார், பேரூர் மருதாச்சலம் அடிகளார் மற்றும் பேச்சளார் சுகி சிவம் போன்ற கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், இந்து சமய உறுப்பினர்கள், சிவனடியார்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மேடை அருகே சென்ற ராகவேந்திரன் என்பவர் “மேடையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் இந்து கடவுள் படம் இடப்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த சிலரும் கடவுள் படம் வைக்கக்கோரி கூச்சல் போட்டனர்.

சுகி சிவமிற்கு கடும் எதிர்ப்பு :

அப்போது அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு இந்து தரப்பினர்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை பெரிதாக மாறியது. அங்கே கைகலப்பு ஏற்படும் அளவிற்கு பிரச்னை வெடித்த்து. அதனை தொடர்ந்து இந்து அமைப்பினர் கீழே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். உறுப்பினர் சுகி சிவம் தமிழ் பாடல்களை சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் ஆத்திகர்களுக்கு ஆதரவாக பேசி வரும் சுகி சிவம் எப்படி கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்படலாம் என்று இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பாதியில் நின்ற கூட்டம் :

பின்னர் பேனரில் கடவுள் புகைப்படம் மாட்டப்பட்டது. இதனை தொடர்த்து வாக்குவாதம் முற்றவே நிலைமை கைமீறி சென்றதால், இந்த குழப்பம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய கருத்துக்களை தபால் மூலமாக இந்து அறநிலை துறை அலுவலகத்திற்கு அனுப்புமாறு குன்றக்குடி பொம்னாம்பல அடிகளார் தெரிவித்தார். பின்னர் போலீசார் சமாதனம் செய்து கூட்டத்தை கலைத்தனர். இந்த விஷயம் தொடராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

Advertisement