திருமணத்திற்கு பின்னர் பல கஷ்டங்களை சந்தித்த மணிமேகலை.. இப்போ அவங்க வாங்கிய பைக்கை பாருங்க..

0
9376
manimegalai
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைன் தம்பதியினரை நாம் அனைவரும் அறிவோம். இரவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றுள்ளனர். மிகவும் க்கயூடடான இளம் ஜோடிகளான இவர்களின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது. காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஹுசைன். மேலும், சினிமாவில் பல்வேறு பாடல்களின் பின்னணி நடன கலைஞராக இருந்து வந்தார். மேலும், பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் சினிமாவில் நடன இயக்குனராக வந்த ஹுசைன், லாரன்ஸ் நடிப்பில் வெளியான மொட்டசிவா கெட்டசிவா படத்தில் ஒரு பாடலுக்கு லாரன்சுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.

-விளம்பரம்-
Manimegalai

அந்த நடனத்தை பார்த்துவிட்டு மணிமேகலைக்கு மிகவும் பிடித்துப்போக ஹுசைனிடமிருந்து அவரது போன் நம்பரை வாங்கி அவரை பாராட்டியுள்ளார். தான் ஆங்கர் என்பதால் சிறிதுநேரம் தன்னிடம் பேசுவார் என்று மணிமேகலை நினைத்துள்ளார். ஆனால், நன்றி என கூறிவிட்டு உடனடியாக போனை வைத்துள்ளார் உசேன். இதனால் மணிமேகலைக்கு ஹுசைனை மிகவும் பிடித்து போய்விட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக வழங்கியிருந்தார்கள், ஒருமுறை மொட்டசிவா கெட்டசிவா படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார் ஹுசைன். அப்போது அவரை மிகவும் மிஸ் செய்த மணிமேகலை அவரை சந்திப்பதற்காக காரிலேயே ஹைதராபாத் சென்றுள்ளார். பின்னர் அவரை அங்கே சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார் மணிமேகலை.

இதையும் பாருங்க : மலேசியாவில் முகெனை வரவேற்க வந்த காரை பாத்தீங்கன்னா அசந்துடுவீங்க.. செம மாஸ்.

- Advertisement -

பின்னர் இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்து திருமணம் செய்வதாக கூறி இருந்தார்கள் ஆனால் ஹுசைன் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் பெற்றோர்கள் துணை இல்லாமல் மிகவும் வாழ்வில் கஷ்டப்படுவதாக மணிமேகலை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் ஆதில், இப்போது நாங்கள் எங்களது வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல நிலைமைக்கு நாங்கள் இன்னும் செல்லவில்லை எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் அவர்களிடம் நிச்சயம் பேச முயல்வோம். இப்போது நாங்கள் பேசினால் நாங்கள் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. பாசம் இல்லாமல் ஒன்றும் இல்லை, பேசவேண்டும் என்ற ஆசைகூட இருக்கிறது நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பாக பேச முயற்சி செய்வோம். முன்பெல்லாம் எனது ரூமில் ஏ சி ஓடிக்கொண்டிருந்த மலையே வெளியில் கிளம்பி போய் விடுவேன். இப்போது ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் அரை குளிர்ச்சியாகி விடும் அதுவே போதும் என்று ஏசியை நிறுத்திவிடுகிறேன்.

அதேபோன்று முன்பெல்லாம் சாப்பாடை அதிகம் வீணாகிய இப்போது கொஞ்சம் கூட வீணாக்காதே இல்லை அப்படியே சாப்பாடும் ஈட்டினாலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன் அதோட அருமை எனக்கு நிச்சயம் புரியும் என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தால் இத்தனை கஷ்டங்களை தாண்டி சந்தோஷமாக வாழ்ந்துவரும் மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதியினர் புதிதாக ஒரு கேடிஎம் 200 சிசி பைக்கை வாங்கியுள்ளனர். இதன் விலை 2 லட்சம் ஆகும். மணிமேகலை சொன்னது போல தங்களது பெற்றோர்கள் திரும்பி பார்க்கும் வகையில் தனது வாழ்க்கையை மாற்றிவருகிறார். மணிமேகலை மற்றும் ஹுசைன் விரைவில் தங்களது வாழ்வில் ஒரு நல்ல இடத்தை பிடித்து இவர்களது குடும்பத்தினர் இவர்களை சேர்த்துக் கொள்வார்கள் என்று வாழ்த்துகிறோம்.

-விளம்பரம்-
Advertisement