காதலர் தினத்தில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி.

0
1759
- Advertisement -

முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது. அந்த காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’. 2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார். 10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமான தியா, மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாராம்.

-விளம்பரம்-
நேற்று தியா பதிவிட்ட புகைப்படம்

பத்தாவது படிக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக வேலை செய்தாராம். ஆனால், இவர் இளசுகள் மத்தியில் ஆரியப்பட்டது என்னவோ சன் மியூசிக் மூலம் தான். கிரேஸி கண்மணி, கால்மேல காசு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தியா மேனன், கேரளத்து வரவு. சென்னை நகரின் கடைகளில் ஏறி இறங்கி அங்கே என்ன கிடைக்கும் என்று சொல்வது முதல் முக்கியமான இடங்களை பற்றி விளக்கி சொல்வதும் தான் கிரேஸி கண்மணியின் வேலை.

- Advertisement -

சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியையும் நடத்தி வந்த தியாவிற்கு, சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினாலும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தார் தியா. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா.

கடந்த ஆண்டு பதிவிட்ட புகைப்படம்

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற   ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடியுள்ளார் தியா. திருமணத்திற்கு பின்னர் தியாவை அவ்வவளவாக டிவி நிகழ்ச்சிகளில் காண முடிவது இல்லை.இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்பங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தியா.

-விளம்பரம்-

Advertisement