விஜய் 62 பட டைட்டில்! சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.! குஷியில் ரசிகர்கள்.!

0
1267
sun-pictures

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 படத்தின் தலைப்பு 21-ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.சன் பிக்சர்ஸ் நேரடியாகத் தயாரித்த முதல் படம் `எந்திரன்.’ அதற்கு முன்பு சூர்யா நடித்த `அயன்’’ விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ , ‘சுறா’ போன்ற படங்களை முதல் பிரின்ட் அடிப்படையில் விலைக்கு வாங்கி தங்கள் பேனர் பெயரில் வெளியிட்டு வந்தது.

`எந்திரன்’ படத்துக்குப் பிறகு, சிறிது காலம் படத் தயாரிப்பு மற்றும் படங்களை வாங்கி வெளியிடுவதில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மீண்டும் பழையபடி படத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது. அதன்படி இந்த ஆண்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கிறது.

அதில், இரண்டாவது முறை சொந்தமாக சன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரித்துவருகிறது. `துப்பாக்கி’, ‘கத்தி’ படத்துக்குப் பிறகு, மூன்றாவதாக விஜய் நடிக்கப்போகும் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக், வரும் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 22-ம் தேதி தலைப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.