எந்த கோர்ட்லையும் இப்படி எல்லாம் நடக்காது – பெரும் கேலிக்கு உள்ளான அன்பே வா சீரியல்.

0
912
anbevaa
- Advertisement -

அன்பே வா சீரியலின் நீதிமன்ற காட்சியை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிய வருகிறது. சன் டிவி என்று சொன்னாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சீரியல் தான். சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்த சீரியல் வெளிவந்து சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பயங்கர ஹிட் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் எதிரிகளாக இருந்தார்கள். பின் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இருந்தும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு எதிராக வருனின் சகோதரியாக வாசுகி இருக்கிறார்.

- Advertisement -

அன்பே வா சீரியல்:

வாசுகி கதாபாத்திரத்தில் நடிப்பவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம மகாலட்சுமி தான். எப்போதுமே வாசுகி, பூமிகா மற்றும் வருணை பழிவாங்க ஏதாவது ஒரு திட்டங்களை தீட்டிக்கொண்டு பல வில்லத்தனங்களை செய்து கொண்டு வருகிறார். அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு வாசுகி தன்னுடைய தந்தையின் சொத்துக்களை தன்னுடைய பெயரில் ஏமாற்றி வாங்கி விடுகிறார். அதற்கு நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. அதில் வாசுகிக்கு எதிராக பூமிக்கு வக்கீலாக மாறி வாதாடி இருக்கிறார். நீதிமன்றத்தில் பூமிகாவின் வாதம் சிறப்பாக இருக்கிறது.

நீதிமன்ற காட்சி:

பிறகு வாசுகிக்கு தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த காட்சி டிவியில் ஒளிபரப்பான உடனே ரசிகர்கள் பலரும் பூமிக்காவின் வாதத்தை பார்த்து புகழ்ந்து தள்ளி இருந்தனர். இந்த நிலையில் இதை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, ஒருவர் சுப்ரீம் கோர்ட் சீனியர் கவுன்சிலர் ஆக இருந்தாலும் ஒயிட் ஷர்ட் ,ஒயிட் ஃபேண்ட் போட்டு வழக்கு நடத்த முடியாது. இது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால், பூமிகா இந்த சீரியலில் சாதாரணமாக சுடிதார் அணிந்து வழக்கினை நடத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இது எப்படி சாத்தியம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஒரு நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், நீதிமன்றத்திற்கு வந்த கலெக்டர் ஒருவரை சரியாக உடை அணியாமல் இருந்ததை பார்த்து திட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த கலெக்டர் ஃபுல் ஸ்லீவர்ஸ் ஷாட் போட்டு, இன் பண்ணி, சூவும் போட்டு இருந்தார். இருந்தாலும், அவரை நீதிபதி திட்டி இருந்தார். காரணம் அந்த கலெக்டர் காலர் பட்டனை மறைக்கிற மாதிரி டை கட்டி கோட் போடாமல் வந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், அன்பே வா சீரியலில் பூமிகா வெறும் கலர் டிரஸ் போட்டு வந்து வழக்கு நடத்தி இருக்கிறார்.

நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை:

அவர் எப்போது சட்டம் படித்தார்? எப்போது தமிழ்நாடு பார் கவுன்சிலர் வழக்கறிஞராக பதிவு செய்தார்? முதலில் ஒரு வழக்கறிஞர் இல்லாதவர் குற்றவியல் வழக்கை நடத்த முடியுமா? இப்படி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் கொஞ்சம் கூட நிஜத்திற்கு சம்மதமே இல்லாத விஷயத்தை காண்பிக்கிறார்கள். இதனால் மக்கள் எல்லாம் தவறாக புரிந்து கொள்கிறார்கள். படங்களிலும், சீரியலிலும் காட்டப்படும் விஷயங்களை உண்மை என்று சிலர் நிஜ வாழ்க்கையிலும் செய்கிறார்கள். ஆனால், நிஜத்தில் இந்த மாதிரி எல்லாம் இல்லை. இதை பார்த்து நிஜத்திலும் நீதிமன்றத்தில் இப்படித்தான் நடக்கும் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்று பலர் அறிவுரை கூறியிருக்கின்றனர்.

Advertisement